அவள் புன்னகை
மூடிய மலர்மொட்டாய்
உந்தன் அதரங்கள்-அதன்
ஓரத்தில் வீசுதே புன்னகை
இளங்காலை தென்றலாய்
அதில் காண்கின்றேன் நான்
ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள்
நீயொரு புன்னகைப் புதையலடி
மொட்டவிழும் எப்போது உன்
பூவிதழ்கள் அதில் பதிந்த
உன் முத்துப்பற்கள் சிரிப்பாய் தெறிக்க
சொல்லடி எப்போது எந்தன் மௌனலிசா
காத்திருப்பேனடி நான் அதுவரையில்
உன் சிரிப்பு தரும் தெம்மாங்கில் மகிழ்ந்திடவே