கவிதை தாருங்கள்

---------------------------------------------

வானவில்லை
படம் பிடித்து
மூளை மடிப்புக்களில்
பதியவைத்தேன்.

மூளை சும்மா இருக்குமா?
வண்ண வண்ணமாய்
நிறம் பிரித்து
தரம் பிரித்து
காதலியின் நினைவில்
கவிதை தா
என்கிறது ...

கற்பனையில் பாதி எழுதினேன்.
----------------------------
வானவில்லாய்
வலம் வந்தவள்
கானல் நீராய்
காணாமல் போனாள்
காணாமல் போனால்
கலங்காமல் இருப்பேனா ? .
நிறங்களை பிரித்து
காதல் அம்புகளாக
அவளிடம் அனுப்பவேண்டும்.
-----------------------------
நிறங்களை
ஏழு பிரித்து விட்டேன்
ஒவ்வொரு நிறத்திலும்
அம்பு செய்து
அன்பு தகவல்
அனுப்பிட வேண்டும்.

எப்படி அனுப்புவது ?
என்ன செய்தி வைத்து அனுப்புவது ?

உதவி தாருங்கள்..!
கவிதை தாருங்கள்..!
தோழர்களே.. :) ப்ளீஸ்
--------------------------------------------------------------------------

பி.கு :மொத்தம் 7 அம்புகள் 7 நிறத்தில் அனுப்பிட வேண்டும்.
ஒவ்வொரு அம்பிலும் ஒவ்வொரு செய்தி வைக்க வேண்டும்
இதுதான் நான் கவி பெருமக்களிடம் எதிர்பார்க்கிறேன்.

(உனக்கு ஏண்டா இந்த வேலைன்னு நீங்க கேட்பது என் காதுல விழுகிறது . :) கொஞ்சம் கவி திடலில் விளையாடுவோமே ..! )

----------------------------------------------------------------------------
இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (25-Jan-14, 7:09 pm)
Tanglish : kavithai thaarungal
பார்வை : 607

மேலே