ஆதலால் காதல் செய்வீர்

காதல்
அழகிய வார்த்தைகளின்
ஆரம்பம்
புரிந்தவனுக்கு
போதிமரம்
புரியாதவனுக்கு
போதை மரம்
கிளிஞ்சலின்
வயிற்றுக்குள் வசிக்கும்
புழு உமிழ்ந்த
சுண்ணாம்பு திரவத்தில்
பிறந்த முத்து
காதல்
இமயத்தை
ஜெயிக்க துணிவு
வேண்டுமா
முதலில்
ஒரு இதயத்தை
ஜெயித்து பழகு
அப்பாக்களுக்கு
பிடிக்காத வார்த்தை
அவர்களே
மகன்களாய்
இருந்த தருணம்
மிகவும் பிடித்த வார்த்தை
காதல்
காதலிக்கவில்லை
என்று சொல்பவன்
கூட
காதலித்து இருப்பான்
அவன் அகராதியில்
அதற்கு வேறு பெயர்
காதல்
மொழிக்கு முன்
வந்தது அல்ல
அமீபாவுக்கு
முன் வந்தது
காதல்
பூட்டிய வீட்டுக்குள்ளேயே
வரும்
பூட்டி வைத்த
இதயத்துக்குள் வராதா?
சாதி மதம்
சாக வேண்டுமா ?
காதலை சொல்லி கொடு
காமம் கலந்த
ஞானம் வேண்டுமா ?
காதலை சொல்லி கொடு
காதல்
கட்சிக்கு
கூட்டணி மிகவும்
அவசியம்
கவிதை எழுத
அடிப்படை
தகுதி
காதல் தான்
காதலுக்கு
இரு கண்களை
இடமாற்றம்
செய்ய
தெரியுமோ ?
தெரியாதோ ?
இதழ்களை
இடமாற்றம்
செய்ய தெரியும்
காதல்
பூகம்பத்திலும்
பூவை மட்டும் தான்
ரசிக்கும்
தன் பெயரை
எழுத தெரியாதவனுக்கும்
தன் காதலி
பெயரை எழுத
கற்று தரும் காதல்
காதல்
பொய்யாய்
ஆரம்பித்தாலும்
மெய்யாய் வாழும்
வானவில்லில்
எல்லா நிறமும்
சேர்ந்து இருப்பதும்
காதல் தான்
காதலுக்கு
இத்தனை
வயதாகியும்
இன்னும் இளமை தான்
தடுக்கி
விழுகிறாய் என்றால்
தாங்கி பிடிப்பது
காதல் மட்டும் தான்
ஆதலால் காதல் செய்வீர் .........................
காதலுடன்
கார்த்திக்