கவிப்பிரியன்- கருத்துகள்
கவிப்பிரியன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [52]
- Dr.V.K.Kanniappan [30]
- மலர்91 [25]
- கவிஞர் கவிதை ரசிகன் [17]
- Ramasubramanian [16]
உங்கள் நட்பு வட்டத்தில் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்
இதோ என் படைப்பு
"வெளிர் முகிலே
இளந்தளிரே
என் கனவில் வரும் கவிஅழகே!
குளிர் நிலவே
குறும்திமிரே
என் மனதில் நிறைந்த மார்கழியே!
வட்டமிடும் வெண்ணிலவு
வானில் திலகமிட
எனக்கு போதுமென
நீ தந்த மிச்சம் வெண்மை;
உன் மீது
நான் கொண்ட அன்பின் எல்லை
நீல(ள)மாய் நீண்டு
வானில் பரவி கிடக்கிறது;
உன் கால்தடம் படவே
புற்கள் பசுமையாய்
ஒற்றை காலில் தவமிருக்கிறது;
கிளிகளின் கண்ணில் படாதே
எப்போதும் இனிக்கும்
சிவப்பு கோவைப்பழமாய்
உன் இதழ்கள்;
என்னைப் பார்த்து
எப்போதும் கேலி செய்யும்
உன் கன்னத்தில் உறவாடும்
கரிய நிற மச்சம்;
காலை கண் விழிக்கும்
கந்தர்வ பூக்கள் அனைத்தும்
உன் கூந்தலில் மணம் பரப்பி
மாலையில் உயிர்துறக்கும்;
என்னை வதைப்பது போல்
மலர்களையும் வதைக்கிறாய் நீ!
அம்மலருக்கு நீ தந்தது ஒரு நாள் தண்டனை
உன்னிடம் நான் கேட்பது
உன் மனதில் ஆயுள் தண்டனையே!
நன்று
பெண்கள்
மானுட தேசத்தின்
மங்காத சுடரொளிகள் ;
மரணத்தின் காலடியில்
ஜனனத்தை விதைப்பவர்கள் ;
கனவுகளில் சிறகடிக்கும்
சிறிது நேர சிறு வயது
பட்டாம் பூச்சிகள்;
இளமை எனும்
நந்தவனத்தில் வாடும் வண்டிற்காக
பூத்து குலுங்கும் மலர் கொத்துகள் ;
வானுயர்ந்த கனவுகள் கண்களில் இருந்தும்
நாணத்தில் தலைகவிழ்ந்து
பூமியை மகிழ்விக்கும்
புதுமை பெட்டகங்கள் ;
கருமை கூந்தலில்
தென்றலை குடிவைத்து
எங்கும் மணம் வீசும்
தோட்டத்து மல்லிகைகள் ;
இரவின் இருளை விட
இதயத்தில் இருள் கணத்து ,
சோக இருளின் போர்வையில்
இல்லறம் நடத்தும்
விடியலை தேடாத
விட்டில் பூச்சிகள் ;
மனச்சுமைகள் இருந்தாலும்
மடிச்சுமைகள் தாங்கும்
நேசமிகு சுமைதாங்கிகள் ;
ஒரு கவிஞனின் பார்வையில்
உயிருள்ள ஓவியம்
எழுதபடாத காவியம் ;
தோற்றத்திலும்
முடிவிலும்
உனக்காக அழுகின்ற
அன்பின் மறுஉருவம் ;
அவள் ஜனனத்தின் பிறப்பிடம்
என்றுமே இறைவனின் இருப்பிடம் ;
அன்பை பகிர்ந்து கொள்ள கிடைக்காத உள்ளம்
பிறரிடம் பெறாத மகிழ்ச்சி
அன்னைமடி இல்லா உறக்கம்
வறுமையே!
நல்ல சிந்தனை .
அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் .
புதிதாக எழுத தொடங்கிய எனக்கு உங்களின் கருத்துக்கள் மீண்டும் எழுத தெம்பூட்டுகிறது .நன்றி நன்றி
நன்றி அனைவரும் அவர்களை அவ்வாறு அழைப்பதால் அவர்கள் படுகின்ற வருத்தத்தை சொல்லவே அப்படி முடித்தேன் .
என் தவறுகளை நிச்சயமாக சரிசெய்து கொள்கிறேன் , நன்றி
தொடரட்டும் உங்கள் கவிதை பயணம் ....
நன்றி என் தவறுகளை தவறாமல் சொல்லுங்கள்
நன்றி என் தவறுகளை தவறாமல் சொல்லுங்கள்
நன்றி என் தவறுகளை தவறாமல் சொல்லுங்கள்
நன்றி