வருந்திடும் மனங்களில் தோன்றிடும்



​​வீதியோரத்தில் விழுதுகள் இரண்டு
நாதியற்று நண்பகல் பொழுதினிலே !
வந்தவழியும் அறிந்திடா மழலைகள்
வாழவழியும் தெரிந்திடா மொட்டுக்கள் !

அவனியில் நிலவிடும் சோகம் இங்கே
ஆதரவு அளித்திட ஆளில்லை அங்கே !
கடப்பவரும் கவலை கொள்ளவில்லை
அன்போடு அணுகுவோர் யாருமில்லை !

பாதையில் இருந்தும் பரிவு பொங்குது
மடியில் படுத்து மழலையும் தூங்குது !
அகவை சிறிதினும் பாசம் பெருகுது
அவர்களை கண்டதும் விழிகள் வழியுது !

கண்டிடும் காட்சியோ புதிதல்ல நமக்கும்
கடந்திடும் எவரும் காண்பர் நிச்சயம் !
வருந்திடும் மனங்களில் தோன்றிடும்
வாடிடும் மலர்களின் நிலையும் மாறிட !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (16-Aug-13, 9:23 pm)
பார்வை : 155

மேலே