வா. நேரு - சுயவிவரம்

(Profile)பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  வா. நேரு
இடம்:  சொந்த ஊர் : சாப்டூர், தற்போ
பிறந்த தேதி :  31-May-1964
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Feb-2011
பார்த்தவர்கள்:  1824
புள்ளி:  361

என் படைப்புகள்
வா. நேரு செய்திகள்
வா. நேரு - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jan-2017 2:49 pm

எத்தனை இலக்கியம்
படித்தாலும்
பலர் படைத்ததைப்
பகிர்ந்தாலும்
இதற்கு நிகராய்
என் மொழியிலும்
எந்த மொழியிலும்
பார்க்கக் கிடைக்கவில்லை....

ஓர் அதிகாரத்தில்
இருபது வரிகளுக்குள்
எடுத்து வைக்கும்
கருத்துக்களை
இரண்டாயிரம்
பக்க நூல்களுகளுக்குள்
தேடினாலும் கிடைப்பதில்லை....

முன்னொரு முறை
படித்ததையே
பின்னொரு முறை
படிக்கும்போது
உள்ளத்து வளர்ச்சிக்கேற்ப
புதிது புதிதாய்
விளக்கங்களை நம் மனதில்
விதைக்கும் கழனி
இதைப் போல் வேறொன்றில்லை....

உள்ளத்து அயர்ச்சியின்போதும்
உறவுகளின் பிரிவின்போதும்
எண்ணத்து தளர்ச்சிகளின்போதும்
என்றோ படித்த
இருவரிகள்
தரும் ஆறுதல்
வேறு எதிலும் கிடை

மேலும்

வா. நேரு - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jan-2017 4:59 pm

கலைக்கல்லூரியில் 'இடம்' வாங்குவது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமாக இல்லை . 'கல்வி' ஒன்றுதான் தன் பிள்ளைகளை வாழ்க்கையில் கரை சேர்க்கும் என ஒவ்வொரு ஆத்தா, அப்பன் மனதிலும் ஆழமாகப் பதிந்த பிறகு, எப்படியாவது-காட்டை,வீட்டை விற்றாவது பிள்ளைகளைப் படிக்கவைக்கவேண்டும் என்று நினைத்து அதற்காக மெனக்கெட்ட பிறகு கல்லூரிகளில், பள்ளிக்கூடங்களில் இடம் வாங்குவது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமாக இல்லை .பிள்ளைகளைப் படிக்கவைக்கவேண்டும் என்ற பெற்றோர்களின் விருப்பம உண்மையிலேயே நல்ல செய்திதான் நாட்டிற்கு.

மேலும்

வா. நேரு - படைப்பு (public) அளித்துள்ளார்
17-May-2016 8:45 pm

வண்டியை நிறுத்துவது அந்த இடத்தில் கடினமாக இருந்தது. அப்படி ஒன்றும் மதுரையின் மையத்தில் உள்ள பகுதி இல்லை. ஒரு இருபது வருடத்துக்கு முன்னால் வயலாக இருந்த மதுரை கிருஷ்ணாபுரம், மகாத்மா காந்தி நகர் பகுதிதான். வரிசையாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்ட நிலையில் , கொஞ்சமாக இருந்த இடத்தில் வண்டியை நுழைத்து, வண்டியை இழுத்து நிறுத்திவிட்டு, கூடையை எடுத்துக்கொண்டு அந்த டிபன் சென்டருக்குள் நுழைந்தான் மணி. ஏதோ மியூசிக் பார்ட்டியில் டிரம் அடிப்பதுபோல டம, டம, டம, டம, டம்,டம் டம், டங்க் என கொத்து புரோட்டாவை கொத்திக்கொண்டிருந்த மாஸ்டர் வெற்றி, மணியைப் பார்த்தவுடன் ஒரு கணம் தனது கொத்து புரோட்டா இசையை நிறுத்திவிட

மேலும்

வா. நேரு - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Feb-2016 5:19 pm

திறக்கும்போது
ஆயிரம் செய்திகள்
குவிந்து கிடக்கிறது
வாட்ஸ் அப் கூடைக்குள் !

எதை எடுப்பது
எதைப் படிப்பது
எனத் தீர்மானிக்கும்முன்பே
புதிதாய்
பத்து பத்தாய்
வந்து விழுகிறது
வாட்ஸ் அப் கூடைக்குள் !

ஒரு கிராம் தங்கத்தை
ஓராயிரம் டன்
மணல்களை அகற்றி
எடுப்பது போல
அலசி அலசித்தான்
எடுக்க வேண்டியிருக்கிறது
நல்லது எது என்று !

அரிதான முத்துக்களாய்
சில நேரம்
அகப்படுகின்றன
கவிதைகளாய் ...
சில நேரம் அரிதான
தகவல்களாய்

ஆனால் பல நேரம்
படித்த செய்திகளே
திரும்பத் திரும்ப
திரும்பத் திரும்ப
போதுமடா ! போதும்
எனத் தோன்றுகிறது ...

சில நேரம் குப்பைகள்
போல மொத்தமாய்
குவிய

மேலும்

உண்மைதான்...சிலவை நன்மைக்காகவும் பல எம்மை வழிகெடுக்கும் சிந்தையிலும் பதிவிட படுகிறது 21-Feb-2016 11:47 pm
வா. நேரு - pudhuyugan அளித்த நூலில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jan-2016 12:09 am

'பலரும் அத்துப்படி; இருந்தாலும் ஒரு நாளும் அத்து மீறாதவர்'. நான் இரவியை 'புலிப்பால் ரவி' என்று அழைக்கத் தொடங்கினேன்' – இது இந்தக் கவிஞரைப் பற்றிய முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களது மனந்திறந்த பாராட்டு!
‘இரவியின் குருதியோடு உறுதியாகவும் உயர்வாகவும் உண்மையாகவும் கலந்திருக்கும் தமிழ் மொழி’ – இது தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களது சீராட்டு.
வானதி பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் ஒரு கவி நூலைத் தான் மேற்சொன்ன தோரணங்கள் அலங்கரிக்கின்றன
நல்நண்பர் கவி இரவி அவர்களது 15ஆம் குழவி - தமிழ் தழுவி, கவி குலவி, இதம் விரவி வந்திருக்கும் 'ஹைக்கூ முதற்றே உலகு' எனும் பிறவி!
‘மலர்கள் முதல் பூங

மேலும்

தங்கள் கருத்திற்கு நன்றி. சிநேகமாய் புதுயுகன் 11-Apr-2016 1:37 am
வாழ்த்துக்கள் கவிஞர் இரா. இரவி அவர்களுக்கு . 20-Jan-2016 10:18 pm
வா. நேரு - கேஅசோகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jan-2016 8:33 pm

புத்தகம் படி தம்பி !

புத்தகம் என்றதும்
புழுங்கி விடாதே தம்பி
புத்தகம் என்றதும்
புலம்பி நில்லாதே தம்பி !
அறிஞர்கள் தேடுவதும்
புத்தகம்தான் !
அறிவியலார் நாடுவதும்
புத்தகம்தான் !

புத்தகம் என்பதே
புத்துயிர்தான் !
புத்தகம் என்பதே
புணரமைக்கத்தான் !

படிப்பதும் அதன்படி
நடப்பதும் நல்லது தம்பி !
பிடித்து படி, நல்ல புத்தகம்
தேடி பிடித்து படி தம்பி

காந்திக்கு ஒரு புத்தகம்
அரிச்சந்திர புராணம் தம்பி
அறிஞர் அண்ணாவிற்கும்
அழகாய் பிடிக்கும் தம்பி
அவர்கள் படி, அறிவோம் படி
அன்பைப் படி அதிகம் படி!
புத்தகம் படி, நல்ல புத்தகம்
மெத்த படி, நல்ல படி தம்பி
---- கே. அசோகன்.

மேலும்

நேருவுக்கும் புத்தகம் பிடிக்கும், தங்களுக்கும்.....? 21-Jan-2016 10:38 pm
நன்றி தோழரே 21-Jan-2016 10:37 pm
புத்தகம் என்பதே நேரான பாதையை வகுக்கும் பயணங்கள் தான் 21-Jan-2016 6:02 am
"புத்தகம் என்பதே புத்துயிர்தான் ! ". உண்மை , வாழ்த்துக்கள். 20-Jan-2016 10:13 pm
வா. நேரு - வா. நேரு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jan-2016 6:56 am

ஒரு வாரம் கழிந்தது - (சிறுகதை) - வா.நேரு

வெளியில் மழை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தது . முந்தா நாள் இரவு பிடித்த மழை. மூன்றாவது நாளாக இப்பொழுதும் தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. பெய்யும் மழையும் சாதாரணமாகப் பெய்யவில்லை, ஓவென்று இரைச்சல் கொடுத்தபடி, இடி , மின்னலென அவ்வப்போது ஒளியும் சத்தமும் கொடுத்தபடி,பெய்து கொண்டேயிருந்தது. இரவில் எந்த நேரம் எழுந்து பார்த்தாலும் சோவென்று மழை பெய்து கொண்டேயிருந்தது அதிசயமாக இருந்தது பூவரசனுக்கு.தனது ஊரில் இப்படி ஒரு இடைவிடாத மழையை தன் வாழ்நாளில் பார்த்ததில்லை அவன்.

ஜன்னல் வழியே வெளியே பார்த்தான். ம

மேலும்

நன்றி ... 19-Jan-2016 6:19 pm
நன்று 19-Jan-2016 5:37 pm
வா. நேரு - மலர்91 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jan-2016 1:25 pm

திருக்குறளின் பெருமைகள் - முனைவர் தொ.பரமசிவன்
================================================
மிகவும் அரிதான செய்திகளை தொல்லியல் ஆதாரங்களோடு திருக்குறளின் பெருமைகளை தொ. பரமசிவன் (முனைவர் - தமிழ்த்துறை ம. சு. பல்கலைக் கழகம், திருநெல்வேலி) அவர்கள் இங்கு வழங்குகிறார்.
===================
உலக நாகரிகத்திற்குத் தமிழினத்தின் பங்களிப்புகள் பல. அவற்றுள் இரண்டைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். ஒன்று, தமிழிசை மற்றொன்று திருக்குறள். தமிழில் மிகச் சில சொற்களில் ஆன கவிதை வடிவம் குறள் வெண்பா ஆகும். மிக விரிந்த உலகச் சிந்தனைகளை மிகக் குறுகிய வடிவத்தில் தர முடியும் என்பதை உலக இலக்கிய அரங்கில் முதலில் வள்ளுவரே

மேலும்

வா. நேரு - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jan-2016 9:30 am

மறைந்ததே மனிதாபிமானம்
மண்ணிலே இன்று !
மறந்ததே இச்சொல்லும்
மனதிலே இன்று !

இருப்போரின் இதயங்கள்
இறுகித்தான் போனதே !
சுழல்கின்ற பூமியும்
சுயநலமானதே !

உதவுகின்ற எண்ணமும்
உலகினில் குறையுதே !
உப்பிட்டோரை நினைப்பதும்
உள்ளத்தில் நீங்கியதே !

பேரிடர் நிகழ்ந்தால்தான்
ஓடிவரும் நிலையிங்கு !
பெருபான்மை நேரங்களில்
ஒதுங்கியே இருப்பதிங்கு !

இனத்திற்கு இடரென்றாலும்
வேடிக்கை பார்ப்பதேன் !
ஈரமில்லா இதயத்துடன்
வீதிஉலா வருவதேன் !

நடிகர்களாய் மாறுவதேன்
நல்லது செய்வதாய் !
வாயடைத்துப் போவதேன்
வாயில்லாத உயிரினமாய் !

அபிமானம் என்பதுமின்று
அந்நிய சொல்லானதே !
மனி

மேலும்

தங்களின் வருகைக்கும் உணர்வுபூர்வமான கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிகவும் நன்றி சாந்தி 24-Jan-2016 10:54 am
//இருப்போரின் இதயங்கள் இறுகித்தான் போனதே ! சுழல்கின்ற பூமியும் சுயநலமானதே ! உதவுகின்ற எண்ணமும் உலகினில் குறையுதே ! உப்பிட்டோரை நினைப்பதும் உள்ளத்தில் நீங்கியதே ! // மிகச் சரியாக கூறினீர்கள். படைப்பு அருமை அண்ணா..!! 24-Jan-2016 10:14 am
தகுதியும் ...என்று வரவேண்டும் ...தட்டச்சுப் பிழைக்கு மன்னிக்கவும் 19-Jan-2016 9:00 am
ஐயா , முதலில் எனது கவிதைகளை தாங்கள் என்றும் வாசித்து உணர்வு பொங்கிட வாழ்த்துவதும் , மரபு முறையில் மாற்றித் தருவதும் , பதிவிடுவதும் என்பது நான் பெற்ற பாக்கியமே . அதை பெருமையாகவே கருதுகிறேன் . எனக்கு ஒரு கௌரவம் கூட .....இதை நான் சற்று கர்வத்துடன் கூறுவதாக கூட நினைக்கலாம் ...தவறில்லை .உண்மை . மரபு மாமணி அவர்கள் எனது எளிய வரிகளை , மரபுக் கவிதாய்க மாற்று கருத்துடன் பதிவிடுவது என்னைப் போன்றவர்களுக்கு ஒரு உந்துதலையும் , வழிகாட்டாகாவும் அமையும் எனபதில் எள்ளளவும் ஐயமில்லை . மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் . நானும் முயற்சி எடுத்தேன் பலமுறை ,....மரபு கவிதைகள் எழுதிட ,,,இன்னும் தேறவில்லை . என்றுமே எனது கவிதைகளை உங்கள் மனதில் பட்டதை கூறிடவும் , மரபாய் மாற்றிடவும் என் அனுமதியே தேவை இல்லை ....உங்களுக்கு முழு உரிமை உண்டு . உங்களுக்கு அதற்கான தஹ்குதியும் உண்டு என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்தும் இருக்காது . மிகவும் நன்றி ஐயா..உங்கள் பதிவால் ...கருத்தால் ....மரபுக் கவிதையாய் மாற்றியதால் . நன்றி நன்றி . வணங்குகிறேன் 19-Jan-2016 8:59 am
வா. நேரு - பொள்ளாச்சி அபி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Jun-2014 7:03 pm

சூரியக்கீற்றுகள்-வா.நேரு.-நூல் அறிமுகம்- பொள்ளாச்சி அபி

சூரியக்கீற்றுகள்..தனது வெளிச்சக் கைளால் உலகை அளந்து,நிலவும் இருளை துளைத்து சிதறடித்து,எங்கும் பரவுகின்ற தன்மையால் சுற்றிலுமிருக்கும் மெய்யை உணரச்செய்யும் தன்மை கொண்டது.

“தோழர் வா.நேருவின் ச+ரியக்கீற்றுகள் கவிதைத் தொகுப்பும்”,ஆண்டாண்டு காலமாய் அகத்திலே நிலவும் இருண்ட சிந்தனைகளை அகற்றி,தெளிந்த சிந்தனையெனும் புதிய வெளிச்சம் தருகின்றதாய் அமைந்திருக்கிறது.

பொதுவாய் கவிதைகள் எனில்,வாசிப்பவனை வார்த்தை ஜாலங்களுக்குள் சிக்கவைத்து,சொல்லவருவது என்ன என மனதை அலைபாயவைத்து,இறுதிவரை இதுதான் சொல்லப்பட்டிருக்கிறது..என்றே புரிந்துகொள்ள முடியாத,வாச

மேலும்

நன்றி தோழர் நிலா சூரியன் அவர்களே, எழுத்து மூலம் நல்ல களமும், எழுத்துக்களும் கிடைப்பது மட்டுமல்ல, உங்களைப் போன்ற நல்ல நண்பர்களும் கிடைத்திருக்கின்றார்கள். மிகச்சமீபம் வரை தோழர்கள் பொள்ளாச்சி அபி, அகன் போன்றோரைச்சந்தித்தில்லை. முகம் தெரியா காலத்தில், எழுத்துக்களால் மட்டும் மதிக்கப்படுவதும், பாராட்ட்ப்படுவதும், ஆரோக்கியமாய் விவாதிப்பதும்,விமர்சிப்பதும் மிகப்பெரிய விசயங்கள். நன்றி ...சிறுகதை வடிவம் தோழர் பொள்ளாச்சி அபி போல்வே உங்களுக்கும் நன்றாக வருகின்றது. தொடர்ந்து எழுதுங்கள்.தொடர்ந்து எழுதுவோம்.. படிப்பவர்கள் தீர்மானிக்கட்டும். 22-Jun-2014 8:29 pm
அய்யா வா நேரு அவர்கள், ஒரு முற்போக்கு சிந்தனைவாதி, அதை அவரது படைப்புகள் அனைத்தும் எனக்கு தெளிவாக உணர்த்தின, ஆகையால் அவரையும் அவரது எழுத்துக்களையும் நான் நேசிக்கத்தொடங்கினேன், வெறும் வார்த்தைகளால் ஜாலம் செய்துவிட்டு, கடைசிவரை ஆழமான கருத்தையும் சொல்லாமல், புரிகிறமாதிரியும் சொல்லாமல், வாசகர்களை குழப்பிவிட்டுச் செல்லும் பல படைப்புகளுக்கு மத்தியில், அய்யா வா. நேரு அவர்களின் படைப்புகள் படித்ததுமே பச்சை மரத்தில் ஆணி அடித்ததைபோல் தெளிவாக அனைவருக்கும் புரிந்துவிடும், ஆகையால் அவரது எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். மூட நம்பிக்கைகளையும், சமூக அவலங்களையும் நார் நாராய் கிழிப்பதோடு, சமூக முன்னேற்றத்திற்கு தேவையான கூறுகளையும் அவரது படைப்புகளில் காண முடியும். ============ ஏழுகோடித் தமிழர்களும் கவிதை எழுதினாலும்,காலவெள்ளத்தில் கரைவது எது.? என்பதனைக் காலம் தீர்மானிக்கும் என்றும் கவிதைகளின் பொதுவான தகுதிகளையும் சுட்டிக் காட்டுகிறார். ================ மிகவும் சரியான ஒரு அளவினை ஆசிரியர் வா நேரு அவர்கள் கூறி இருக்கிறார். நாம் எவ்வளவோ எழுதி எழுதி குவித்துக்கொண்டு இருந்தாலும் சரி, இன்றைய சந்ததியருக்கும், பிற்கால சந்ததியருக்கும் என்ன அவசியமாக் உள்ளதோ, எது வழிகாட்டலாக உள்ளதோ, எது உண்மையானதாக உள்ளதோ,,, அது மட்டுமே நிலைத்து நிற்கும், அதுமட்டுமே கரைந்துபோயவிடாமல் கலங்கரை விளக்கமாக இருக்கும் என்பதுதான் உண்மை. அந்த வகையில் பார்க்கப்போனால் அய்யா வா நேரு அவர்களின் சிந்தனை பிற்கால சந்ததியருக்கும் அவசியமானதா இருக்கிறது என்பதுதான் உண்மை, ஆம் அவர் இன்றைய சந்ததிக்கு எழுதி இருந்தாலும் அது அடுத்த சந்ததியருக்கும் அவசியமானதாகவே இருக்கிறது, அவரது சிந்தனைகள் எதோ வந்தோம் எழுதினோம் என்று இல்லாமல் தனது அடையாளமாக இந்த சமுதாயத்திற்கு எதையாவது விட்டுவிட்டுச் செல்ல வேண்டும் என்ற மூலக்கூறுகள் இவரது படைப்புகளில் இருக்கிறது என்பதை அறிய முடிகிறது. காலத்தின் போக்கு பொய்மைகளை புரட்டிக்கொண்டு போய்விடும், உண்மையான மூலக்கூறு படிமங்கள் மட்டுமே என்று நிலைத்து இருக்கும் என்பதுதான் உண்மை. அய்யா வா நேரு அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அன்புடன் நிலாசூரியன். 22-Jun-2014 5:59 pm
வணக்கம் தோழரே..! உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. புத்தகத்தின் விலை.ரூ.100-என்றே என்னிடம் உள்ள புத்தகத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. தற்போது அது ரூ.70-என்ற அளவில் குறுக்கப் பட்டுள்ளதா..என்று எனக்குத் தெரியவில்லை. மேலும்,நேரடி விற்பனையில் ரூ.70-சரியாக இருக்கும்.!பிற பகுதிகளில் இருக்கும், இந்தப் புத்தகம் தேவைப் படுபவர்கள்,ரூ.100 -என்ற அளவில்.உங்களுக்கு அனுப்பி வைத்தால்தானே, அதனை தபால் அல்லது கூரியரில் அனுப்பும் செலவையும் தாங்கும்.? ஹஹ்ஹா.ஹஹ்ஹா. கருத்துக்கு நன்றி தோழரே..! தோழர் அகன் அவர்கள் தந்த பாராட்டும் ஊக்கமும் , பின்னர் அனைத்துமாக நின்று இந்த நூல் வெளிவரக் காரணமாக இருந்து அருமையாக அச்சடித்துக் கொடுத்து, அய்யா கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் கைகளால் புதுச்சேரியில் வெளியிடச் செய்து பெருமை படுத்தினார். வார்த்தைகளால் நன்றி சொல்ல இயலாது, வணங்கித்தான் சொல்ல வேண்டும் நன்றி திரு அகன் அவர்க்ளுக்கு. . ! உண்மை..உண்மை..அதில் மறு கருத்து இல்லை. வழக்கம் போல அடுத்து அவரது வேலையை..துவங்கிவிட்டார்.மேல் விபரங்களுக்கு போட்டிகள் பகுதியைப் பாருங்கள்..பங்கு பெறுங்கள்..வாழ்த்துக்கள்..! இவை எல்லாவற்றுக்கும் மூல காரணமாய் இருக்கின்ற எழுத்து தளத்திற்கும்,அதன் நிர்வாகிகள் ராஜேஷ் குமார் உட்பட அனைவருக்கும்.இந்த நேரத்தில் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.! அன்புடன் பொள்ளாச்சி அபி. 22-Jun-2014 1:28 pm
நன்றி தோழர், சூரியக் கீற்றுகள் நூல் விமர்சனத்திற்கு . மிகத் தாராளமாகப் பாரட்டியிருக்கின்றீர்கள். எழுத்து இணையதளம், இல்லையென்றால் இந்தக் கவிதைத் தொகுப்பு இல்லை. எழுத்து நிர்வாகிகளுக்கு எனது முதல் நன்றி . தோழர் அகன் அவர்கள் தந்த பாராட்டும் ஊக்கமும் , பின்னர் அனைத்துமாக நின்று இந்த நூல் வெளிவரக் காரணமாக இருந்து அருமையாக அச்சடித்துக் கொடுத்து, அய்யா கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் கைகளால் புதுச்சேரியில் வெளியிடச்செய்து பெருமை படுத்தினார். வார்த்தைகளால் நன்றி சொல்ல இயலாது, வணங்கித்தான் சொல்ல வேண்டும் நன்றி திரு அகன் அவர்க்ளுக்கு. . முகம் அறியா நிலையில், எவரென்று அறியா நிலையில் நீங்கள்(பொள்ளாச்சி அபி), தோழர் அகன் போன்றாரின் பாராட்டு, எழுத்துவில் எழுதும் நண்பர்கள் ஈஸ்வர் தனிக்காட்டு ராஜா, கே.எஸ்.கலை, ரமேஷலாம்,இரா.இரவி, சுப.முருகானந்தம், நிலா சூரியன் , மங்காத்தா , எழுத்து சூறாவளி, பரிதி முத்து ராசன்..... எனப் பலரும் கொடுத்த பின்னோட்டங்கள்தான் இந்த நூல், நூலாக வெளிவருவதற்கு அடிப்படை. அனைவருக்கும் நன்றி. முடிவாக ஒரு திருத்தம், நூலின் விலை ரூ 100 என்று போட்டிருக்கின்றீர்கள், நூலின் விலை ரூ 70. நன்றி தோழரே, நன்றி. 22-Jun-2014 1:10 pm
வா. நேரு - பொள்ளாச்சி அபி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Jun-2014 8:30 pm

கவிஞர் கோசின்ரா எழுதிய பூனைகளின் கடவுள்.!” தொகுப்பு, புது எழுத்து பதிப்பகத்தின் சார்பில்,116 பக்கங்களுடன்,ரூ.70 விலையில் வந்துள்ளது வெறும் ஐம்பது பக்கங்களுடன் வெளிவரும்,அக்கடா,துக்கடா தொகுப்பெல்லாம் 100,200 என விலைவைத்து விற்கப்பட்டுக் கொண்டிருக்க,விலைமதிப்பற்ற சிந்தனைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ள இத்தொகுப்பு கவிதை எழுதும் முயற்சிகளில் இருப்பவர்கள் மட்டுமல்ல,பிரபல கவிஞர்களின் கையிலும் இருக்கவேண்டிய தொகுப்பு என்பது எனது கருத்து.

கோசின்ரா எனும் புனைப்பெயரில் இயங்கும் இவருடைய இயற்பெயர்-கோ.ராசேந்திரன்.கடந்த பதினைந்து வருடங்களாக எழுதிவரும் இவரின் அரசியல் கவிதைகள் மிகப்பிரபலம்.சமூக யதார்த்தங்களின்

மேலும்

உங்கள் விமர்ச்சனம் கூறிய உண்ம்மைத்தன்மை அந்த நூலை படித்தே ஆகவேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டது அண்ணா, ஊருக்கு வந்ததும் முதல் வேலையாக நிறைய புத்தகங்களை வாங்க வேண்டி இருக்கிறது. நன்றிகள் அண்ணா... 25-Jun-2014 9:40 am
குத்துக்கு மிக்க நன்றி தோழரே..! நிச்சயம் நூலை வாங்கிப் படியுங்கள். அதனைப் படித்தபின் அபி எழுதிய விமர்சனம் கொஞ்சம்தான் என நீங்கள் உணர்வீர்கள்.! "மிக நீண்ட காலத்திற்குப்பிறகு, முழுக்கமுழுக்க பயனுள்ள..,நேரத்தைத் தின்று தீர்க்காத.,கற்றுக் கொள்ள வாய்ப்பளித்த ஒரு கவிதைத் தொகுப்பை வாசித்ததன் நிறைவு.." உங்களுக்கும் நிச்சயம் ஏற்படும்..! அப்புறம்..சூரியக் கீற்றுகள் நூல்..விமர்சனத்தை இன்னும் முடிக்கவில்லை. -தொடர்ச்சியாக பல்வேறு சிக்கல்கள்..சொல்லப் போனால்.".சே..விஷேச நாட்கள் .." என்று குரிப்பிட்டுலீர்களே..அதேபோல கையறு நிலை. இன்னும் இருதினங்களுக்குள் எனது கருத்துக்களை இங்கு பதிவேன் தோழரே.! வாருங்கள் மீண்டும் பேசுவோம்.! அன்புடன் பொள்ளாச்சி அபி.! 18-Jun-2014 9:37 pm
நல்ல விரிவான புத்தக விமர்சனம் . வாங்கி வாசிக்க வேண்டும் என்னும் ஆவலைத் தூண்டியிருக்கிறது . வாழ்த்துக்கள் தோழரே . 18-Jun-2014 7:37 pm
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழரே.! 16-Jun-2014 11:37 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (49)

இவர் பின்தொடர்பவர்கள் (49)

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடி - தென்காசி
ஈஸ்வர் தனிக்காட்டுராஜா

ஈஸ்வர் தனிக்காட்டுராஜா

நாகர்கோயில்(குமரி மாவட்ட
பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (49)

R.Arun Kumar

R.Arun Kumar

நாமக்கல்
snekamudan sneka

snekamudan sneka

எப்போதும் உங்கள் இதயம்
மேலே