மனிதம் நேயம் இறந்துவிட்டது. குறைகளை கேட்க வேண்டிய காதுகள் அடைபட்டுப் போனது.
என்ன அழுது என்ன??
கடைசி ஓலம் வரைக்கும் தன் காதுகளை செவிடாக்கி கொண்டிருக்கும் கயவர்களை என்ன சொல்வது??
வரிகள் வலிக்கிறது. 17-May-2014 9:54 am
ஆனால், இரண்டு லட்சம் அப்பாவித்தமிழர்களை பறிகொடுத்துவிட்டு, பறிதவிக்கிற தமிழர்கள் அந்த ஆத்மாக்களுக்கு ஒன்றுகூட அஞ்சலி செலுத்த தடை விதித்து இருக்கிறார்கள், சிங்கள இனவெறி அரசியல் காட்டேறிகள்...........இவர்கள் சந்தோசத்தை கொண்டாடுவார்களாம், நாம் துக்கத்தில் அழக்கூடாதாம்.... என்ன ஒரு மனித உரிமை பார்த்தீர்களா.....??? ////////
காட்டேரிகளின் சர்வதிகாரம் இனியும் நிலைக்ககூடாது. இதற்காகவே.. மெரீனா கடற்கரையில் நாம் வீரியமாக ஒரு சுனாமி பேரலையை மிஞ்சும் வகையில் கொந்தளிக்க வேண்டும். அந்த கொந்தளிப்பில் எதிரியின் சூழ்ச்சி, சூட்சமம் தூள் தூள் ஆக வேண்டும். 14-May-2014 8:20 pm
நீண்ட நாட்களாக மனத்துள் தேங்கி கிடந்த ஒரு எண்ணத்தை செயல்படுத்தும் நோக்கில் இந்த புதிய முயற்சியை தொடங்குகிறேன் !
இந்த முயற்சியில் சமகால கவிஞர்களின் கவிதைகளும் அவை பேசும் கருத்துகளும் பற்றி கொஞ்சம் விரிவாக பேசுவதில் என் சிந்தையை புகுத்துகிறேன்...
அந்தவகையில் தளத்தில் நுழையும் ஒரு புது படைப்பாளி எழுதிய புதிய படைப்பொன்றை எடுத்துக் கொண்டால் எனக்கும் இலகுவாக இருக்கும் என்பதால் "வாருங்கள் இளைஞர்களே" என்ற தலைப்பில் ஒரு துடிப்பான, சமூக ஆர்வமிக்க இளைஞரின் பதிவை எடுத்துக் கொள்கிறேன் !
======================
அபி சார்.....
வெளிப்படையாய் இங்கே விமர்சனம் எழுதினால் என்ன நடக்கும் .............? எல்லாமே நடக்கும் !!! ஹஹஹ !
நல்ல விமர்சனம் என்று நீங்கள் ஏற்றுக் கொண்டதால் இப்படியான விமர்சனங்களை தொடரப் போகிறேன் !
விமர்சனம் குறித்த விமர்சனத்தையும் நீங்கள் கருத்துகளில் பகிர்ந்துக் கொள்ளுங்கள் ! 14-May-2014 8:47 pm
"இந்தப் படைப்பாளி..?.. முதன்முதலாய் இந்தத் தளத்திற்குள் நுழைந்தபோது.."
அப்பாடா..இதனைக் கண்டுகொள்ளவே இரண்டு வருடத்திற்க்கும் மேலாகிவிட்டது..,எனில், இவரது பணியில் இன்னும் கோளாறு நிறைய இருக்கிறது.வேகம் போதாது. இவர் இன்னும் சிறப்பாக எழுத முயற்சிக்க வேண்டும் என்பது புரிகிறது..!
என்ன ஒரு குறையெனில்..இதுபோன்ற விமர்சனங்கள் அப்போதே இந்தப் படைப்பாளியை செதுக்கியிருந்தால்.கழிந்து போன இந்த இரண்டு வருடங்களையும் இப்போது சபித்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
கலையின் விமர்சனம் ஆழ..அகல ..உழுதிருக்கிறது..!
ஒரு படைப்பாளி என்ற நிலையில் இருந்து சற்று எட்ட நின்று பார்த்தால்..,இந்த விமர்சனம்,படைப்பாளிக்கு மிகத் தேவையான விஷயங்களை உள்ளடக்கி வழிகாட்டுகிறது..!
"சமையலில் கொஞ்சம் சுவையூட்டிகள் சேர்த்துக் கொள்வதைப் போல (சத்திற்குப் பாதிப்பிலாமல்) கவிதைக்கு கொஞ்சம் இலக்கிய அலங்காரங்கள் காட்டாயம் தேவை ! "--- உண்மைதான்..! இனி எழுதுவதில் சற்று கவனத்தை இவர் வைத்துக் கொள்ளவேண்டும்.
நல்ல விமர்சனம் எழுதிய கலைக்கு நன்றி..! இன்னும் நிறைய விமர்சனங்களைத் தொடர்ந்து எழுதுங்கள்..! வாழ்த்துக்கள்..!! 12-May-2014 1:35 pm
நிச்சயமாக. அதையே தான் அய்யா நானும் சொல்லி இருக்கிறேன் !
இளைஞர்கள் மத்தியில் ஒரு மாற்றத்தை உண்டாகும் சக்தி இந்த எழுத்துகளுக்கு உண்டு ! அந்த எழுத்துகளை இளைஞர்கள் மத்தியில் கடத்துவதே என் இந்த பணியின் நோக்கம் !
மிக்க நன்றி அய்யா கருத்திற்கு ! 11-May-2014 6:38 pm
மிக்க நன்றி அண்ணா தங்களின் ஊக்குவிப்பிற்கு !
வரலாற்று மேற்கோள்களைச் சுட்டிக் காட்டி மிக அருமையான கோணத்தில் தங்களின் கருத்தை முன்வைத்திருக்கிறீர்கள் !
நாங்கள் மறந்துவிட்ட எத்தனையோ துணிகர புரட்சிகள் இருக்கிறது..அதில் நீங்கள் சுட்டிக் காட்டிய வரலாற்று குறிப்புகள் மறக்கவே கூடாத சம்பவங்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை !
மாவா பற்றி தெரிந்து வைத்திருக்கும் இன்றைய இளைய தலைமுறைகளில் எத்தனைப் பேர் மாவோ பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது சிந்திக்க வேண்டிய விடயமாகிப் போய்விட்டது !
அபி சாரின் இந்த படைப்பு போல இன்னும் ஏராளமான படைப்புகள் இந்தக் கவிதைக் குவியலில் காணாமல் போய் கிடக்கிறது என்பதை அறிவீர்கள் !
மெல்ல மெல்ல அவற்றுக்கு முகவரி கொடுப்போம் என்பது தான் என்னுடைய இந்த முயற்சியாக இருக்கிறது !
பலரதும் படைப்புகளை எடுத்து இப்படி பேசுவதே எனது எண்ணம் !
தொடர்வேன் அண்ணா....! மிக்க நன்றி தங்களின் அருமையான கருத்திற்கு ! 11-May-2014 6:35 pm
கொலை மிரட்டலுக்கு பதிலாய் கலையின் கலை திரட்டல்...அருமை சேக்காளி...!
முகம் காட்டவோ, முகவரி நீட்டவோ திராணியற்ற யாரோ ஒருவன் / ஒருத்தி உனக்கு எதிரியாய் வர இயலாது...ஏனெனில் உனக்கு எதிரியாவதற்க்கு கூட சில தகுதிகள் வேண்டும்...மற்றபடி இம்மிரட்டல், வாருகையில் வீழும் முடிகளுக்கு சமம்.
நீ கலக்கு சித்தப்பு ! 01-Jun-2014 6:16 pm
உடலினை விற்றுப் பிழைக்க - இந்த
"ஊர்விட்டு ஓடிய பூச்சிகள்
விடமென வார்த்தைகள் வீசி - என்
விடியலை அழிக்குமாம்!.. சிரிப்பு !"
கடலினை விற்றும் காசுபார்க்க
அலையும் கூத்தாய் திரியும் கூட்டம்..!
கரையின் ஓரம் வந்தால் கூட
வாரிச்சுருட்டும் கலையின் கவிதை..!
கவலை கொள்ள கலையும்கூட
சவலைக் குழந்தை எனும் நினைப்பு
எவளுக்கோ..எவனுக்கோ இருந்தால்
ஐயோ..பாவம்.அவருக்காய் சற்று
அழுதிடுவோம்.., விரைவில் மனநலம்
பெறவும் வாழ்த்திடுவோம்..!
20-May-2014 9:37 pm