snekamudan sneka- கருத்துகள்

வலதுகையிலே இருக்குற அஞ்சு வெரலையும் விரிச்சு,டாட்டா காட்டுற மாதிரி,ஜடா முடியும் தாடியுமா நின்னபடி,போட்டோ புடிச்சு வெச்சுருக்கறான்.பத்தாக்குறைக்கு, ரெண்டு தோள்பக்கத்துலேயும் ரெண்டு வெள்ளக்காரிக வேற..ஈ..ன்னு இளிச்சுகிட்டு,கும்பிட்டுகிட்டு நிக்குறாளுக. அவளுகளுக்கு எப்ப, என்னத்தை ‘வழங்கப்’போறான்னு தெரியலை.., இவன் என்ன எழவோ வழங்கிட்டுப் போகட்டும் சார்..அவம் பொழைக்க எதுவோ தகிடுதத்தம் பண்றான்.அதை நம்புற ஆளுக காசு,பணம் கொடுத்துட்டுப் போவாங்க போல..,அதுலே எனக்கொன்னும் பிரச்சினை இல்லே சார்..இப்பவே,அவங்கிட்டே காசு,பணம் நெறய இருக்குன்னு தெரியுது. இல்லேன்னா..ஒரே ராத்திரியிலே, அவ்வளவு பெரிய வேலியைப் போட்டு,செவுரு கட்ட அஸ்திவாரம் எழுப்பி,வழியை அடைக்க முடியாது சார்..!."

உண்மை..உண்மை..அரசு நிலம் என்றாலே அது வசதி படைத்தவனுக்கு சுலபமாய்க் கிடைக்கும் எனும் போக்கு, தமிழகம் மட்டுமல்ல..இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் நடைபெற்றுக் கொண்டே இருக்கும் இந்த அவலத்தை சரியாக சுட்டிக் காட்டினீர்கள்..!
கதையின் மூலம் நீங்கள் சுட்டிக் காட்டும் மானுடம் தழுவிய சிக்கல்கள் குறித்தான படைப்புகள்.இங்கு மட்டுமல.வெளியிலும் அதிகமாக நான் வாசித்ததில்லை. இது போன்ற பிரச்சினைகளைப் பேசும் கதைகளை இன்னும் நிறைய தனியான தொகுப்பு ஒன்று போடும் அளவில் நீங்கள் எழுத வேண்டும் என்பதே எனதுவேண்டுகோள்..
கதையும் சொல்லிய விதமும் மிக நன்று.!


“திட்டம்போட்டு திருடுற கூட்டம்,திருடிக் கொண்டே இருக்குது..”
மிக யதார்த்தமான அன்றாட நடை முறை..!
கல்விக் கடன் பெற்ற குழந்தைகளின் படங்களைப் போட்டு வங்கிக்கு வெளியே போஸ்டர்கள் வைக்கப் படுகின்ற கேவலமான நடைமுறையையும் நீங்கள் சுட்டியிருக்கலாம்.சரி அது மற்றொரு கதையில் வரும் என்று நம்புகிறேன்.!

“எழுத்தால் உலகம் மாறும்”
என்பதுன் வாதம்..!
“ எழுத்தை நிஜமாக்கும்
செயலால் உலகம் மாறும்”
என்பது என் வாதம்..!

உங்களோடான எனது அனுபவம்..இதனை உண்மையே என உணர்த்துவதால்..இந்தக் கருத்தோடு நான் ஒன்றிப் போகிறேன் அப்பா..!

வீட்டு வாசப்படியேறும்போது,தலைக்கட்டோட இருந்த காளிமுத்து மாமா, யாரையும் பாக்க முடியாம தலையைக் குனிஞ்சுகிட்டாரு.!

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடி நின்ற பரம்பரையைச் சேர்ந்த மனிதர்கள் நிறைந்திருந்த நாட்டில்.இப்போது காளிமுத்து போன்றவர்கள் தலையை குனிந்து கொள்ளவேண்டிய கேவலம்..!
இதுபோன்று மனித உருவில் நடமாடுபவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அனைவரும் தலைக் குனிந்து கொள்ளத்தான் வேண்டும் ..!
எனது தனி விடுகை பார்த்தீர்களா.?

திசை தவறிய குழந்தையென...
நடுவழியில் கடத்தப்பட்ட குழந்தையென...
நான் தவித்துத் திரிகிறேன்...
என் வழியெங்கும்...
தவறுகளிலிருந்து விடுதலை வேண்டி..."

எனது கடந்த காலத்திலிருந்து
நான் "விடுதலை" பெற்றுவிட்டேன்..!

உயிர் நிரம்பிய "கல்"லாய்
நான் வளர்ந்து கொண்டிருக்க...
வலிக்காமல்...
என்னைச் செதுக்கிய விரல்களை...
நான் ஒருபோதும்...
மறப்பதற்கே இல்லை. "

அருமை..அருமை..

அருமை..அருமை..ஒவ்வொரு வரியும் நான் அனுபவித்து வாசித்தேன்.ஏன் எனில்..அது எனது அனுபவமாகவும் இருந்ததுதான். வாசிப்பவரின் அனுபவமும் படைப்பின் வரிகளோடு ஒன்றிப் போய்விடும், --இங்கே எப்போதாவது நடைபெறும் -- அதிசயமான தருணங்களில் இதுவும் ஒன்று என்பதை மன நிறைவோடு பதிவு செய்கிறேன்.!
வாழ்த்துக்கள் ரமேஷ் ஆலம் அவர்களே..!

"யுத்தத்தின் சுவடாய் நான் மட்டும் போதும் .." என்ற கவிதைத் தொகுப்பில் உங்கள் எழுத்துக்கள் இடம் பெற்றபோதே.. உங்கள்வெற்றிப் பயணத்திற்கான படிகள் சமைக்கப் பட்டுவிட்டன என்று நான் அறிவேன்.
தற்போது உங்கள் பயணம் உயர்வை நோக்கி பயணித்துக் கொண்டு இருக்கிறது என்பதும்,,இந்தப் படைப்பு சொல்லும் செய்தி அதன் அளவைக் காட்டுகிறது என்றும் எடுத்துக் கொள்கிறேன்..வாழ்த்துக்கள் நண்பரே..!

".இதற்கு தோழர்களான அகன் மற்றும் பொள்ளாச்சி அபி ஆகியோருக்கு என்னுடைய உரிமைகள் நிறைந்த வணக்கங்கள் . "

தளத்தில் உள்ளவர்களை..தங்கள் பிள்ளைகளாக.தோழர்களாக ,உறவுகளாக எண்ணி செயல் பட்டுவரும் திரு அகன் அவர்களைக் குறித்து,எனது தந்தை திரு பொள்ளாச்சி அபி அவர்களின் மூலம் நிறைய செய்திகள் அறிந்து வைத்துள்ளேன்.
ஆனால்..,தாங்கள் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ள இந்த விஷயத்தில்..அவர்களின் பங்கு என்ன..? எவ்வாறு..? என்பதையும் சற்று விரிவாக குறிப்பிட்டு இருக்கலாமே நண்பரே..!
வரலாறு என்பதும்,அதற்க்கு ஆதாரமான தகவல்கள் என்பதும் மிக முக்கியமல்லவா.?
அவர்கள் உங்களுக்காக என்ன செய்தார்கள் என்பதை சத்தியமாக அவர்கள் வெளியே சொல்லமாட்டார்கள்." மரத்தை நட்டுவிட்டு,கனிகள் குறித்த கவலைகளற்று செல்பவர்கள்.." அவர்கள் என்பதை நான் ஏற்க்கனவே அறிந்திருக்கிறேன்.
ஆனால், அவர்களைப் பற்றி நாம் அறிந்து கொள்வதும்,சொல்வதும் முக்கியம் என்று நினைக்கிறேன்.
எனது இந்த வேண்டுகோள்,தங்களுக்கு ஏற்ப்புடையது எனில் இங்கு பகிருங்கள்..., இல்லாவிடினும் வருத்தமில்லை..இந்த வேண்டுகோள் ஏதேனும் நெருக்கடியான மன நிலைக்கு உங்களை உள்ளாக்கியிருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் நண்பரே...!

ஆகா..ஆகா.. அருமையான வாழ்த்துப் பா..அய்யா..
வாசிக்க..வாசிக்க ..வரிகள் காட்டாற்று வெள்ளமாய் இழுத்துச் செல்லும் அனுபவம் பெற்றேன்..வாழ்க உம் தமிழ்..வளர்க உம் புகழ்..!

பாவலர் ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு நீங்கள் பாடிய வாழ்த்துப் பாவின்,அடியொற்றியே எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் அய்யா..!

தங்கள் பெயர் சொல்லும் பெயரனுக்கு..நீங்கள் இதைவிட எதனையும் சிறந்ததாய் -சொத்து உட்பட - இனி எழுதிவைக்க முடியாதையா..!
எட்டு பாடல்களும் தெவிட்டாக் கனி ..!
வார்த்தைகள் பூசிவந்த வசந்தம்..!
தருணின் நலத்திற்கு எனது வாழ்த்துக்கள்..!

பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

உன் வார்த்தைகளின் நுனிப் பிடித்து
என் கவிப் பயணம் ....
தேன் சிந்தும் உன் நடைபற்றி
நான் பெற்றேன் தமிழ் அமுதம் ...
பிறந்த நாள் இன்று உனக்கு
சிறந்த நாள் தமிழுக்கு இன்று..... "

அய்யா.தமிழன்பன் அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்களையும் தெரிவியுங்கள் ..இலக்கிய முரசு அகன் அய்யா அவர்களே..!

"இது போன்ற லூசுத் தனமான படைப்புகளுக்கு இப்படியொரு தலைப்பை வைத்தால் தானே நாலு பேரு எட்டிப் பார்ப்பார்கள் என்ற வியாபார புத்தியும் தான் இப்படியான தலைப்பொன்றை வைக்க காரணம் !"
இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.கலையின் கவிதைகளுக்கு அப்படியொன்றும்,"பார்வையாளர்களைக் கவர்வதற்காக.." என்ற நிலை இன்னும் வரவில்லை..இனிமேலும் வராது..அதனால்..இதுபோல மோடி மஸ்த்தான் வேலைகளை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று உரிமையோடு உங்களிடம் சொல்வதற்கு,நட்பின் பெயரால்..அதிகாரம் உண்டுதானே..!

ஹஹ்ஹா ..நண்பர் கலை அவர்களுக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு,எனது வணக்கம்.நலமா.?
போகிறபோக்கில் கிறுக்கியது என்றாலும்,அருமையான வரிகள்தான் இவை. இறுதியாய்.. "குப்பை போடாதீர்கள்" என்று நான் எழுதிய படைப்புகள் நினைவுக்கு வருகிறது.
இப்போதும் "அதே" நிலையே இங்கு நீடித்து வருகிறது என்பதை உங்கள் வரிகளின் மூலம் தெரிந்து கொண்டேன்.
இதற்காக சிரிப்பதா..? வேதனைப் படுவதா.?
"அன்னதானம் போடுகையில்
ஆத்திகனாகவும்
அண்டா கழுவவேண்டி வருகையில்
நாத்திகனாகவும் .." ..வடிவேலு மொழியில் சொன்னால் "நல்லா போடுறாங்கய்யா வேஷம்.." என்றே கூற வேண்டியது இருக்கிறது.
மனிதனுக்கு தேவையான வழி..ஆத்திகமே என்று சொல்பவர்களே..திடீரென்று நாத்திகம்தான் உண்மையான வழி..என்றும் சொல்கிறார்கள்..! சரி ஏதோ தெளிவடைந்து விட்டார்கள் போல இருக்கிறது என்று நினைத்தால்..மீண்டு ஒரு சில இடங்களில் ஆத்திகமே நல்லது என்கிறார்கள்..!
இப்படியேதான் எல்லா பிரச்சினைகளிலும்.இரு வேறு நிலை,இருவேறு கருத்து,இருவேறு படைப்பு..என ஊசலாடுவதை பார்க்க முடிகிறது..
ஏன் இந்த வேறுபாடு என்று கேட்டால்..முழ நீளத்திற்கு விளக்கம்..[?].அதனை வாசித்துப் பார்த்தால்..இறுதியில்,[அவரின் படைப்புகள் போலவே ] இவர் என்னதான் சொல்லவருகிறார் என்றும் குழப்பமடைவது உண்டு.[ அதனை நாங்கள் பினாத்தல் என்றும் சொல்லுவோம்..! ]
சரி..எல்லோரும் கவிஞர்கள்.., படைப்பாளிகள் என்ற முகமூடியை அணிந்து கொண்டபின், அதற்கான சுதந்திரம் பெற்று விடுகிறார்களே.. பின்,அதற்க்கேற்றவாறு அவர்கள்,
உ [கு] ரைப்பதை சகித்துக் கொள்ளவே வேண்டும்..!

சரி..தங்கள் பக்கத்தில்,எனது சுதந்திரததிற்கு, இத்துடன் எல்லையிட்டுக் கொள்கிறேன்..! தங்களின்,தங்களைப் போல சிலரின் மற்ற படைப்புகளையும் பார்த்து விட்டு வருகிறேன்.!

நீங்கள் தொடர்ந்து எனது எழுத்தை பாராட்டி வருகிறீர்கள்.உங்கள் அன்புக்கு நன்றி.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

வணக்கம்.!
தங்கள் கேள்வி எனக்குப் புரிந்தது.
ஆனால் எனக்குள்ள சுதந்திரம்
பற்றி.நீங்கள் அறிந்திருக்க
வாய்ப்பில்லை.

எனது மனக்குதிரைக்கு மட்;டுமே
எல்லைகளில்லை.
கண்களின் பார்வைகூட
காம்பவுண்ட் சுவரைத்
தாண்ட முடியாது.!

கைவிரல்களுக்கும்
அதிகபட்சமாக
ஜன்னல்கம்பிகளோடு
மட்டுமே உறவு.!

என்னைக் கண்காணிக்கவும்,
எனக்கு கட்டளையிடவும்
ஏராளமானோர் உண்டு.!
அவர்கள் அதிகாரிகளாதலால்
அவர்களுக்கு சம்பளமும்
உணடு.!
எனவே,எனது தொடர்புகள்
கவிதையாகவே இருந்தாலும்
அதில் ஏதேனும் செய்தி
இருப்பதாக அவர்கள்
நினைத்தால்..அதைக்
கட்டுப்படுத்தவும்
உரிமையுண்டு..!

நான் எழுதுவதை,நானே படிக்க
அதனைத் திருத்தியெழுத
எனக்கு நேரமில்லை.ஆனால்
உங்கள் அனைவரின்
எழுத்துக்களையும்
அவசரமாகவோ,
ஆதுரமாகவோப்
படித்துக் கொள்ள அனுமதிக்கப்
பட்டிருக்கிறேன்.!
அதுவும் அவ்வப்போதுதான்.!

எனவே எனது பதில்கள்
இல்லை,அதில் அக்கறையில்லை
சினேகமில்லையென்று கூட
சில நண்பர்கள்
தனிப்பட்ட விடுகையில்
தகவல் சொல்கிறார்கள்.

அனைவருக்கும் எனது
அன்பான வேண்டுகோள்
இதுதான்.!
பதில் எழுதாவிட்டாலும்
உங்கள் அனைவரின்
நினைவும்,அன்பும்
பத்திரமாக எனது
மனதில் இருக்கிறது.!
வாழ்த்துக்கள்.!

நன்றி அண்ணா..! பிறகு பேசுகிறேன்.!

மிக சரியாக சொன்னீங்க மணிகண்டன்..
குப்பையை எங்கே போடுறதுன்னு, தெளிவு வந்துவிட்டதென்றால் ... இங்கே பாதி தளம்..இல்லை ..பாதி உலகம் தெளிவாயிடும்னு நம்புவோம்.!

வாங்க பானு மேடம்.! உங்க கருத்துக்கு மிக்க நன்றி..!


snekamudan sneka கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே