ஒரு விரலாய்...மறு குரலாய் இருப்பாயடா .......(தொடர் பாக்கள் - 8) அகன்
அணைத்தாலும் நீங்கி இடம் பெயர்ந்தாலும்
இணையாய் என்னுள் எப்போதும் உன் ஸ்பரிசம்!
கன்னல் சாறு கசக்கின்றது கண்ணே – உன்
கன்னம் வழி உமிழ்நீர் தித்திக்கையிலே. உண்மை
பிடித்திழுத்து கசக்கிக் கிழித்துவகை பெறும் உன்
துடிக்கும் கரங்களுக்காய் நிலையடுக்கில் தவம்
கையசைத்து கண் மேல்கீழிறக்கி
சைகை பேசும் உன்முன் நானொரு பொம்மை.
பிறந்தாய் நீ, பிரகாச வெள்ளத்தில் – என்னில்லம்!
துறந்தோம் இருட்டை! இரண்டாம் ஆதவன் நீ!
கடவுளின் நிழல் வெளிச்சமெனில் உன்பாத
தடங்களில் எனக்கான வழி உண்டோ சொல்!
தொடரும்...