சந்தேகம்
அத்தனை பேர் கூடியிருந்த
அந்த அதிகாலை வழிபாட்டில்
ஆலயக் கூரையில் இருந்து
வாலாட்டி விழுந்ததொரு பல்லி
என் வலப்பக்கத் தோள்மீது;
சில நொடியில் காது மடலில்
சிலீரெனப் பாய்ந்திட்ட அதனை
தட்டிவிட்டாள் பின்னிருந்தப் பெண்
சிலிர்த்ததென் தேகம் முழுவதும்
கூடவே எழுந்தது சந்தேகம்
மயிற்கூச்செறியச் செய்தது
சீச்சீ அந்தப்பல்லியா பாவையா?