நால்வகை பூக்களா???

மலர்களில் பிரிவுண்டு பொதுவாக
அதனை..
நால்வகையில் வகுத்திடலாம் செறிவாக

இனியதாய் தெளிவுரை ஒன்று நயமாக
இச்சிறியவள் ஒப்பிக்கின்றேன்
இதோ பணிவாக....

தலைவி அவள் கூந்தலிலே
தலைவன் சூட மகிழ்ந்திடும்
முதல்வகை

இறைவன் பூஜையிலோ
அர்ச்சனை மலராய் இடம்பெரும்
இரண்டாம் வகை

காலனின் பசைகயிற்றில்
சிக்குண்டவன் காலடி சென்று சேரும்
மூன்றாம் வகை

கைக்கெட்டாமல், கனியும் காயாமல்
மண்ணில் உதிர்ந்து போகும்
கடை வகை...

பூவையும் பூவையையும்
ஓரிடத்தில் வைத்தான்
அன்றே ஓர் கவி

அந்த பதுமமும்
இந்த பதுமையும்
ஓரினம் என்பதுதான் உண்மை கதி

சிரத்தை கொண்டு கொஞ்சம் சிந்தித்து பாரீர்
வகை வாரி
எந்தன் சின்ன கவியும் சொல்லிடுமே
பெண்ணை மெருகேறி....

எழுதியவர் : செல்வி கிருஷ்ணன் (26-Sep-13, 3:12 pm)
பார்வை : 109

மேலே