செல்வி கிருஷ்ணன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : செல்வி கிருஷ்ணன் |
இடம் | : Puthu Yugam |
பிறந்த தேதி | : 24-Aug-1987 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 03-Jul-2013 |
பார்த்தவர்கள் | : 268 |
புள்ளி | : 35 |
கவிதை விரும்பி... :)
பெண்களே!!
மண் குதிரைகளை நம்பி
கடலில் இறங்காதீர்கள்
உங்கள் நீச்சல் திறமையை மட்டும்
நம்புங்கள்!!
அக்கரை தொடலாம்...
ஒருவேளை....
மரத்தமிழனை கண்டீர்களானால்
அவனை நம்பினால்
நம்புங்கள்....
மிதந்து சென்றாவது
அக்கரை சேர்ப்பான்...?!
காரணம்
அழகு என்பது
பருவ தோற்றம்
ஆண்மை என்பது
உண்மை தோற்றம்
காலம் கடந்தும்
மாறாதது...!!!!
பெண்களே!!
மண் குதிரைகளை நம்பி
கடலில் இறங்காதீர்கள்
உங்கள் நீச்சல் திறமையை மட்டும்
நம்புங்கள்!!
அக்கரை தொடலாம்...
ஒருவேளை....
மரத்தமிழனை கண்டீர்களானால்
அவனை நம்பினால்
நம்புங்கள்....
மிதந்து சென்றாவது
அக்கரை சேர்ப்பான்...?!
காரணம்
அழகு என்பது
பருவ தோற்றம்
ஆண்மை என்பது
உண்மை தோற்றம்
காலம் கடந்தும்
மாறாதது...!!!!
எழுந்து நில் மலையாய் நிமிர்ந்து
உயர்ந்து செல் வான் முட்டும் அளவு
கடந்து செல் காற்றாய் வேகம் கொண்டு
கலைந்திடாதே காலை பனியாய்
ஒருபோதும்..
முட்டி மோது அருவியாய் நீர் ஊற்றாய்
பெருக்கெடுத்து ஓடு காற்றாற்று வெள்ளமாய்
என்றும்..
அணையாதே சூரியனாய் உயித்தெழு...
ஆனால்....
அன்பு ஒன்றுக்கு மட்டும்
குழந்தையாகிடு..
என் அருமை பெண் இனமே...!!!
ஒத்தடம் கொடுக்கும் எழுத்துக்களில்...
உண்மை இல்லை....
உணர்வில் கலந்த அன்பில்...
பொய்மை இல்லை....
தீவாய் பிரிந்த நம்மில்...
நேர்மை இல்லை....
நாம் கொண்ட உறவில்...
வறுமை இல்லை....
பொய்யாய் போன தேசங்கள்...
கண்டு திகைக்கிறேன்....
மெய்யான வார்த்தை சொல்ல...
மொழியின்றி தவிக்கிறேன்....
அற்பன் உம் நாடகம்...
அத்திறமையை பாராட்டினேன்....
உந்தன் மூச்சு காற்றும் விசம்தான்...
விலகி போகிறேன்....
உன் எச்சில் தொடும்போது தான்
சுத்தமாகின்றன
அத்தனை சோற்றுப் பருக்கைகளும்
சொர்க்கம் புகும்
வழிஎதுவென்று கேட்டால் சொல்லுவேன்
அவ்வப்போது திறந்து மூடும்
உன் அதிசய பூவிதழ் என்று ......
உன் எச்சில் நீர் தீர்த்தமாகிறது
உன் மழலை பேச்சு
அச்சில் வார்த்த அகராதியாகிறது...
நீ இதழ் திறந்து பேசுவதற்காகவே
இப்பிறவி முழுதும்
மௌனமாகிறேன்...
கவிதாயினி நிலாபாரதி
அரிதாரம் பூசிக் கொண்டு
>>>பாசம் வேஷம் போடுது !
உரிமையான உறவும் கூட
>>>உடுக்கை அடித்து நகைக்குது !
எரியும் உள்ளம் கனல்கக்க
>>>எண்ணெய் இன்னும் ஊற்றுது !
சரிந்த மனம் சோர்வுற்று
>>>சலித்து ஏங்கித் தவிக்குது !
சிரிக்க மறந்து கவலையினால்
>>>வதனம் வாடிப் போகுது !
செரிக்கவில்லை உண்ட உணவும்
>>>ஏச்சு காதில் ஒலிக்குது !
திரித்து பேசி நடிப்பவர்க்கு
>>>காலம் நல்லா நடக்குது !
நரி போலும் தந்திரமாய்
>>>நய வஞ்சகம் புரியுது !
மரித்துப்போன இதயம் குத்தி
>>>ரண களமாய் ஆக்குது !
பரிவு காட்ட ஆளின்றி
>>>விழி இரண்டும் கசியுது !
பிரிவினிலும் கருணை இன்றி
>>>லாபம் மட்டும் பார்க்குத
உன்னிடத்தில் என்னை கொடுத்து
எனக்குள் உன்னை கோர்த்து- நாம்
விளையாடும் இந்த
பண்ட மாற்று போன்ற
ஒரு காதல் விளையாடெதற்கு?
விதியென்று ஒன்றிருக்கு
வழிநடத்த வாழ்விருக்கு...
அதற்கிடையில் இப்படி ஓர்
ஆசை எதற்கு!!
நடத்தி வரும் ஆசான் அங்கே
நன்றாய் ஆட்டுவித்தான்
நம்மை இங்கே
நடுநிலையில் மனிதம் இன்னும்
இருக்கிறதா???
எங்கே??? எங்கே???
பிரிந்துத்தான் போகும்
என்றால்
பிரமாத கூட்டணி
நமக்குள் ஏனோ??
மண்ணும் உன்னை திண்று விட்டது
மணதில் இன்னும் வாழ்கிறாய்
அன்பா..
உன் நினைவை சுமந்து
இவள் இன்னமும் நடக்கிறாள்
கேள்வி குறியாய்........
உன்னிடத்தில் என்னை கொடுத்து
எனக்குள் உன்னை கோர்த்து- நாம்
விளையாடும் இந்த
பண்ட மாற்று போன்ற
ஒரு காதல் விளையாடெதற்கு?
விதியென்று ஒன்றிருக்கு
வழிநடத்த வாழ்விருக்கு...
அதற்கிடையில் இப்படி ஓர்
ஆசை எதற்கு!!
நடத்தி வரும் ஆசான் அங்கே
நன்றாய் ஆட்டுவித்தான்
நம்மை இங்கே
நடுநிலையில் மனிதம் இன்னும்
இருக்கிறதா???
எங்கே??? எங்கே???
பிரிந்துத்தான் போகும்
என்றால்
பிரமாத கூட்டணி
நமக்குள் ஏனோ??
மண்ணும் உன்னை திண்று விட்டது
மணதில் இன்னும் வாழ்கிறாய்
அன்பா..
உன் நினைவை சுமந்து
இவள் இன்னமும் நடக்கிறாள்
கேள்வி குறியாய்........
எங்கிருந்தோ வந்த மலர்
இளைபாறுகிறது இருக்கையிலே,
கூடவே காற்றும்.
நீங்கள் மரணித்ததுண்டா?
நான் மரணித்திருக்கிறேன்
நீங்கள் மரண வலியை
தொண்டைக்குழியில் உணர்ந்ததுண்டா??
நான் உணர்ந்திருக்கின்றேன்
சென்னை சட்டக்கல்லூரி மாணவன்
காவல் அதிகாரியின் கண்முன்னேயே
மிருகத்தனமாய் தாக்கப்பட்டபொழுது
டெல்லி கடுங்குளிரில்
கற்பழித்து தூக்கியெறியப்பட்ட
நிற்பயாவின் நிர்வாண உடலை
நினைவில் கொண்டு வரும் பொழுது
குஜராத்தில் கர்ப்பிணிகளின்
வயிறு கிழிக்கப்பட்டு சிசுக்கள்
சிதைக்கப்பட்ட பொழுது
கோயம்பத்தூரில் தம்பிமார்களே
அண்டைவீட்டு அக்காமார்களை
அடித்து கற்பழித்தது கண்டு
கும்பகோண பள்ளித்தீவிபத்தில்
வெந்து கருகிய மாணாக்கர்களை
காப்பாற்ற முயலாத