எச்சில் தீர்த்தம்

உன் எச்சில் தொடும்போது தான்
சுத்தமாகின்றன
அத்தனை சோற்றுப் பருக்கைகளும்

சொர்க்கம் புகும்
வழிஎதுவென்று கேட்டால் சொல்லுவேன்
அவ்வப்போது திறந்து மூடும்
உன் அதிசய பூவிதழ் என்று ......


உன் எச்சில் நீர் தீர்த்தமாகிறது
உன் மழலை பேச்சு
அச்சில் வார்த்த அகராதியாகிறது...


நீ இதழ் திறந்து பேசுவதற்காகவே
இப்பிறவி முழுதும்
மௌனமாகிறேன்...


கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (18-Aug-14, 7:29 pm)
Tanglish : echchil theeertham
பார்வை : 411

மேலே