கவிதாயினி நிலாபாரதி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கவிதாயினி நிலாபாரதி
இடம்:  புதுக்கோட்டை
பிறந்த தேதி :  14-May-2000
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  20-May-2014
பார்த்தவர்கள்:  572
புள்ளி:  297

என்னைப் பற்றி...

அன்பில் மட்டும் மிக அழுத்தம் வாய்ந்தவள். நேசிப்பில் நெஞ்சம் தொடுபவள் .......

என் படைப்புகள்
கவிதாயினி நிலாபாரதி செய்திகள்
கவிதாயினி நிலாபாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Oct-2015 11:37 am

புகைத்துக்கொண்டே இருக்கிறான்
புகைந்துகொண்டே இருக்கிறது பூமியும் பூதவுடலும்!

மேலும்

அருமை...! 15-Oct-2015 12:56 pm
கவிதாயினி நிலாபாரதி - சீதளாதேவி வீரமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Oct-2014 1:37 pm

கருவில் முளைத்த கண்ணீர் விதையே!
காலமெல்லாம் இனி தண்ணீர் பஞ்சமாம்
கனவிலும் கூட கானலே மிஞ்சுமாம்

இனி வேர்களுக்கு வேலையில்லை
உணவுக்கு வயலும் தேவையில்லை
உழவென்ற வார்த்தைக்கே அர்த்தமில்லை
காரணம்
முன்னோருக்கு நம்மேல் அக்கரையில்லை

வளர்ச்சியென்ற பாதையிலே
வருங்காலத்தை வதைத்தோரே!
செயற்கை தண்ணீருக்கு
செய்முறை விளக்கம் தந்தீரா?
காடுகழனி அழித்து
கல்லறைக்கு வழி அமைத்தீரா?
நெருப்பினை மூட்டி
நெகிழிகளாலே நேரம் குறித்தீரா?

இனி
மழையின் மேகமே நீ
மரணித்துப்போவாய்
கடலில்லா நிலமே நீ
கலையிழந்துபோவாய்
உலகமே நீ உருக்குலைந்துபோவாய்
நாங்கள் உருவமிழந்துபோவோம்

பூமித்தாயே! கண்ணீர் விடு
கடலளவு

மேலும்

நன்றி 26-Nov-2016 7:31 am
தங்கள் கவிதை பயணம் அன்றும் இன்றும் என்றும் வெற்றி நடை போடுகிறதே! தொடரட்டும் இனிய தமிழ் கவிதை பயணம் பாராட்டுக்கள் தமிழ் அன்னை ஆசிகள் 24-Nov-2016 12:14 pm
நன்றி சகோதரி... 18-May-2015 7:25 am
உங்கள் எழுத்துக்கள் தொடர வாழ்த்துகிறேன் அன்பு சகோதரி ! 13-May-2015 4:56 pm
கவிதாயினி நிலாபாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Nov-2014 7:21 pm

என் உறக்கம் கலையாமல்
எனை எழுப்பும்
சின்னக் குழந்தையின்
செல்லத் தீண்டல் நீ !

போர்த்திய போர்வைக்குள்
புகுந்துகொண்டு
அணைப்பை அற்புதமாய்
உணரவைக்கும்
புலர்ப் பொழுதின் புதுக்காற்று நீ !

விழிகளின் திறப்புவிழாவில்
விருந்தினராய் நுழைந்துவிட்ட
விடியலின் வெளிச்ச சாரல் நீ !

வெண்ணிலா முகம் பார்க்க
விடியல் வரை விழித்திருந்து
நுனிவிரல் பட்டவுடன்
சிலிர்த்து விழும் சிறுதுளி நீ !

கோடிகள் சேர்க்காமல்
கோப்பைக்குள் குடிவந்து
கொஞ்சலாய் ததும்பி நிற்கும்
குறும்புகள் நீ!

அதரம் நனைக்க அமுதம் சுரக்கும்
அருவியும் நீ !

எல்லோருக்கும் ஏதோவாகும் நீ
எனக்கு மட்டும் யாதுமாகிறா

மேலும்

நன்று தோழமையே... 19-Nov-2014 11:46 pm
கவிதாயினி நிலாபாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Nov-2014 7:01 pm

என் மீதான கோபத்தில்
தொலைவில் போகிறாய் நீ
என்னை
தொலைத்துவிட்டு ....


சுரம் கொதிக்கும் மணல்நீரில்
சுள்ளியாய் எரியும் நெஞ்சம்
சுழல் காற்றாய் சுற்றுகிறாய்
சூறைக் காற்றில் பிடியிழந்த
பஞ்சின் நூலாய் நான் !

தீயும் தீண்டிப்பார்க்காத
நெருப்பாற்றின் வேகம்
உன் நெஞ்சோரம்
கசிந்த வார்த்தைகளில்..

கசக்கி பிழிவதே உன்
கைப்பலன் என்றறிந்தபின்
கதறும் விதைகளின் மொழி
விழுமா உன் செவியில் ?

கனியாக இருப்பினும்
கனியாத மரமாய் இருப்பினும்
கல்லடிகள், தடியடிகள் மட்டுமே தண்டனை
வேரில் நீர் இருக்கும் வரை ....


நிழல் நீயென சாய்ந்தேன்
நித்திரைக் களைந்தாய்
மெய்முகம் வெள

மேலும்

கவிதாயினி நிலாபாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Nov-2014 12:40 pm

அடைமழையில் நனைவதைவிட
அதிசுகம் அவ்வப்போது
சிரித்தப்படி சிந்திவிட்டு போகும்
சின்னத் சின்னத் தூறல்களில்தான்!!


உன் கோபங்களில்
எழுந்து வருவதெல்லாம்
என் மீதான காதலே....

கடலின் காலடியில்
சங்கமிக்கும் நதிநீராய்
உயிரினில் நுழைகிறேன்
உனக்குள் சங்கமிக்க ...

நீரின்றி போகும் மலர்வனமாய்
நீயின்றி சாகும் என்வாழ்வு !!


அவ்வளவுதான் என்று
முடிவுகட்டுகிறாய்
என் அவ்வளவும் நீதான்
என்பதை அறியாமல் ...


கவிதாயினி நிலாபாரதி

மேலும்

கடலின் காலடியில் சங்கமிக்கும் நதிநீராய் உயிரினில் நுழைகிறேன் உனக்குள் சங்கமிக்க ... நீரின்றி போகும் மலர்வனமாய் நீயின்றி சாகும் என்வாழ்வு !! அழகிய வரிகள் தோழமையே.. அருமை... 11-Nov-2014 9:46 am
அழகு.முடிவு கட்டுகிறாய்....முடிவுக்கட்டுகிறாய்.... 10-Nov-2014 4:43 pm
வெகு இயல்பு வரிகளில் அதி அழகு உணர்வின் வெளிப்பாடு !! தொடர்ந்து ஏன் பாதிப்பதில்லை என்பது தான் வருத்தத்திற்குரிய ஐயம் !! வாழ்த்துக்கள் !! 10-Nov-2014 1:13 pm
கவிதாயினி நிலாபாரதி - கவிதாயினி நிலாபாரதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Nov-2014 6:05 pm

தெய்வங்களை விரும்பும் மனிதர்கள்
தேவதைகளை அவ்வளவு
எளிதில் விரும்புவதில்லை ....

மனிதர்களின் முதல் தவமும்
முழுத் தவமும் இதுவே !

தேவதைகள் எப்போதும்
விரும்பியபடியே வரம் தரவேண்டும்!
மனதில் நினைப்பதை தந்துவிடவேண்டும்
சில கணங்களில் மௌனமாயும்
நின்றிட வேண்டுமென்று கேட்டே ஒரு வரம்


தேவதைகளின்
விழியும் நோக்குவதற்க்கில்லை
வலியும் நோக்குவதற்க்கில்லை..
முகம் நோக்கா கண்கள்
முழுதும் நோக்குவதற்கு மட்டும் மறுப்பதில்லை

வெள்ளைநிற தேவதைகளை தேடியே
கொள்ளை மனிதர்களின் இருவிழித்தவம்
வெள்ளந்தி மனிதர்கள்
மாறிவிட்டார்கள் பச்சோந்தியாய் ......

சாபம் கொடுத்து அனுப்பிவிட்டான

மேலும்

நன்றி தோழமைகளே 09-Nov-2014 4:38 pm
மிக அருமையான படைப்பு நிலா பாரதி ! அதிலும் ==தேவதைகளின் ==விழியும் நோக்குவதற்க்கில்லை ==வலியும் நோக்குவதற்க்கில்லை.. ==முகம் நோக்கா கண்கள் ==முழுதும் நோக்குவதற்கு மட்டும் மறுப்பதில்லை என்ற வரிகள் மிக அற்புதமாக இருக்கின்றது ! கன்னத்தில் அறைந்துச் சொல்லும் உண்மையாகவும் இருக்கிறது ! மிக மிக அருமை ! வாழ்த்துகள் ! 09-Nov-2014 12:11 am
சாபம் கொடுத்து அனுப்பிவிட்டான் அந்தக்கடவுள் .... வரம் கொடுக்கும் மரம் மட்டும்தான் சாகும் வரை நீங்கள் வாழ்வதற்க்கில்லை என்று ! மிக அழகிய வரிகள் தோழமையே... வாழ்த்துக்கள் தொடருங்கள்.... 08-Nov-2014 6:48 pm
பிழையாகும் பெண்தேவதை பிறப்பொன்று வேண்டாம் என்று இப்போதெல்லாம் தேவதைகள்அழுகின்றன வரம் கேட்டு ..... கிடைக்காமல் விழுகின்றன மண்ணில் மண்டிப்போட்டு ... உண்மையான வரிகள்....சொல்ல வார்த்தைகள் இல்லை.... 08-Nov-2014 6:16 pm
இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) Enoch Nechum மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
29-Sep-2014 7:59 am

பதினெட்டு ஆண்டுகள், தொன்னூறு நீதிபதிகள், ஆறு நீதிமன்றங்கள், ஐந்து கோடி ரூபாய் செலவு என்று கடந்து ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது.

இரும்பு பெண்மணி, சர்வ வல்லமை படைத்தவர், நிர்வாகத்திறன் மிக்கவர், ஆண்வர்க்கத்தை அடக்கி ஆளும் வீரதீர துணிச்சலான பெண்மணி . பல துயரங்களை கடந்து ஒரு பெண்ணாக சாதிக்கும் ஈடு இணையில்லா ஜெ.ஜெயலலிதா. அம்மு என்று அறிமுகமாகி அம்மா என்று விஸ்வரூபமாக வளர்ந்து நிற்கும் இவரின் அசாத்திய வளர்ச்சி பாராட்டக்கூடியது மட்டுமல்ல, மிகுந்த ஆச்சரியம் தரக்கூடியது.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களை எதிர்த்து அரசியலில் சாதிப்பதும், முதலமைச்சராக அரியணை ஏறுவதும் அவ்வளவு சாதாரண விஷயமல்ல. அரசியலை

மேலும்

அற்புதமான தலையங்கம் ... 04-Oct-2014 2:09 pm
அருமையான கருத்து 04-Oct-2014 10:12 am
மிக்க நன்றி நண்பரே... 29-Sep-2014 11:22 pm
அருமை அருமை அருமையான கவிதை.. சமூகத்தை தாக்கும் விரோதிகளை தாக்கிய கவிதை . சிறப்பான கருத்துரைக்கு நன்றி தோழா..! 29-Sep-2014 11:10 pm

தீர்ப்பு ....
இந்த நான்கெழுத்து
வார்த்தைக்குதான்
நாள் கணக்கில் காத்திருந்தோம்

பூத்திருந்த பூவெல்லாம்
பொசுங்கித்தான் போனதங்கே
உயிர் நசுங்கித்தான் வாடுதிங்கே ......

உடம்பெல்லாம் கருகையிலே
உயிரெல்லாம் உருகையில
காட்சியாதான் பாத்துபுட்டு
சாட்சிய ஏன் தேடுறிங்க

நள்ளிரவில் நடந்திருந்தா
நாலு பேரு கேப்பிங்கன்னு
நட்டநடுகூடத்தில
பட்டபகல் வெளிச்சத்துல
பத்தித்தான் எரிஞ்சதையா
உயிர் கத்தித்தான் கரைஞ்சதையா

உங்களுக்கு சாட்சிதான் வேணுமுன்னா
சடலத்தையே வைச்சிருப்போம்
சரஸ்வதி கூடத்துல
நாங்க சாகும்வரை கரைஞ்சிருப்போம்

தீ தின்ன வேகம் வேண்டாம்
நீங்க எழுதுற தீர்ப்புல தா

மேலும்

மனம் கனக்கிறது தோழி 12-Aug-2014 8:31 pm
வலி பொருந்திய வரி 12-Aug-2014 2:56 pm
தீ சுட்ட காயமெல்லாம் காலத்துல ஆறிப்போகும் உங்க தீர்ப்புசுட்ட காயம் எப்படியா ஆறிப்போகும்? நெஞ்சை சுடும் வரிகள் ...! 30-Jul-2014 4:04 pm
கவிதாயினி நிலாபாரதி - GOVINDAN MANIKANDAN அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
23-Jun-2014 9:53 pm

காற்சுவடுகளும் காலணியும்

மேலும்

விபரங்களுக்கு நன்றி தோழரே..! 01-Jul-2014 1:12 pm
நன்றி நண்பரே ! விவரங்கள் அளித்துள்ளேன் ! 30-Jun-2014 8:42 pm
ON 20.07.2014 - 11.30 AM AT IKF COMPLEX, திருப்பூர் - LIONS CLUB INTERNATIONAL DISTRICT 324B1 CABINET INSTALLATION FUNCTION. அறிமுகம் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களால் DONATING THROUGH THE BOOK SALES RS.1.00 LAKH TO "SAMAATHAANAM" ORPHANAGE, AVINASHI 30-Jun-2014 8:42 pm
வாழ்த்துக்கள தோழர்.! வெளியீட்டு விழா குறித்த செய்திகளையும் இங்கு எங்களோடு நீங்கள் பகிர்ந்து கொள்ளலாமே ..! 23-Jun-2014 10:27 pm
கவிதாயினி நிலாபாரதி - இரா-சந்தோஷ் குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
20-Jun-2014 1:54 am

”தமிழ் இலக்கியத் திருவிழா”

தினமணி நாளிதழ் நடத்தும் ”தமிழ் இலக்கியத் திருவிழா” ஜூன் 21, 22 (சனி மற்றும் ஞாயிறு) அன்று சென்னைப் பல்கலைகழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடைப்பெறுகிறது.

இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர் திரு.அப்துல்கலாம் நிகழ்வுகளை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைப்பார்.

முதல் நாள் நிகழ்வுகள் (ஜூன்21) : பழ.நெடுமாறன், திருச்சி சிவா மற்றும் தமிழருவி மணியன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். அதனுடன் 4 அமர்வுகளாக பல்வேறு பிரபலங்களின் தலைமையில் வெவ்வேறு தலைப்பில் கருத்தரங்கம் நடைப்பெறுக (...)

மேலும்

பகிர்விற்கு நன்றி பல 20-Jun-2014 2:39 am
கவிதாயினி நிலாபாரதி - இரா-சந்தோஷ் குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
12-Jun-2014 7:38 am



தமிழனிடம் தமிழில் பேசுவது தவறா ?
இதில் ஒரு வசனம்.. “ ஆங்கிலத்தில் பேசும்போது வேற்றுமொழியை கலந்து ஆங்கிலம் பேசுவீர்களா? “ அப்புறம் ஏங்க தமிழில் பேசும்போது வேறு மொழியை கலந்து பேசுறீங்க “ .. நெத்தியடி வசனம்.

இன்னும் சிறப்பாக எடுத்து இருக்கலாம். ல,ழ,ள உச்சரிப்பு சரியில்லை என்று விமர்சன மேதாவிகள் ஆயிரம் சொல்லட்டும் என்றாலும் தமிழ் மொழியின் சிறப்பையும் அவசியத்தையும் அழகாக சொல்லும் இந்த குறும்படத்தின் குழுவினரின் முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியாது.
இந்த குறும்படம் எடுத்த குழுவினருக்கு பாராட்டுக்கள்.


-இரா.சந்தோஷ் குமார்

மேலும்

ஆம் அய்யா. நன்றி ! 12-Jun-2014 10:49 am
கருத்திற்கு நன்றி கார்த்திகா :) 12-Jun-2014 10:48 am
“ ஆங்கிலத்தில் பேசும்போது வேற்றுமொழியை கலந்து ஆங்கிலம் பேசுவீர்களா? “ அப்புறம் ஏங்க தமிழில் பேசும்போது வேறு மொழியை கலந்து பேசுறீங்க “ .. அனைவரும் கண்டிப்பாக உணர வேண்டும் அண்ணா !! 12-Jun-2014 8:08 am
நானும் இதை பார்த்திருக்கிறேன் . மிகவும் பாராட்டவேண்டிய படம். அனைவரும் பார்க்க வேண்டிய படம். 12-Jun-2014 7:39 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (27)

நான குமார்

நான குமார்

பொன்னேரி, சென்னை
ஜெகநாதன்

ஜெகநாதன்

ஜெர்மனி
பாஸ்கர்

பாஸ்கர்

சிவகாசி
கட்டாரி

கட்டாரி

பட்டுக்கோட்டை.
மணிசந்திரன்

மணிசந்திரன்

கூடலூர் நீலகிரி

இவர் பின்தொடர்பவர்கள் (27)

விநாயகபாரதி.மு

விநாயகபாரதி.மு

தர்மபுரி, தமிழ் நாடு
கட்டாரி

கட்டாரி

பட்டுக்கோட்டை.

இவரை பின்தொடர்பவர்கள் (27)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
Enoch Nechum

Enoch Nechum

இலங்கை
jothi

jothi

Madurai
மேலே