திருத்தப்படவேண்டிய தீர்ப்புகள்
தீர்ப்பு ....
இந்த நான்கெழுத்து
வார்த்தைக்குதான்
நாள் கணக்கில் காத்திருந்தோம்
பூத்திருந்த பூவெல்லாம்
பொசுங்கித்தான் போனதங்கே
உயிர் நசுங்கித்தான் வாடுதிங்கே ......
உடம்பெல்லாம் கருகையிலே
உயிரெல்லாம் உருகையில
காட்சியாதான் பாத்துபுட்டு
சாட்சிய ஏன் தேடுறிங்க
நள்ளிரவில் நடந்திருந்தா
நாலு பேரு கேப்பிங்கன்னு
நட்டநடுகூடத்தில
பட்டபகல் வெளிச்சத்துல
பத்தித்தான் எரிஞ்சதையா
உயிர் கத்தித்தான் கரைஞ்சதையா
உங்களுக்கு சாட்சிதான் வேணுமுன்னா
சடலத்தையே வைச்சிருப்போம்
சரஸ்வதி கூடத்துல
நாங்க சாகும்வரை கரைஞ்சிருப்போம்
தீ தின்ன வேகம் வேண்டாம்
நீங்க எழுதுற தீர்ப்புல தான்
ஈரம் தான் காஞ்சுபோச்ச
இன்னைக்கி
எடுத்து வச்ச பேனாவுல
நீதி
அதன் சாரம்தான் சாஞ்சுபோச்சா
சந்தியில அழுகுதையா
சத்தமில்லாம
சிறு சருகு .......
தீ சுட்ட காயமெல்லாம்
காலத்துல ஆறிப்போகும்
உங்க தீர்ப்புசுட்ட காயம்
எப்படியா ஆறிப்போகும்?
கவிதாயினி நிலாபாரதி