====தொடரும் =====

செக்கிழுத்த செம்மலெங்கே ?
சீர்கெட்ட இளைஞன் இங்கே
மணிக்கொடியின் மைந்தன் எங்கே ?
மதுவின் புதல்வன் இங்கே

சமத்துவத்தின் தந்தை எங்கே ?
சாதிக்கொரு தலைவன் இங்கே
நீதிகாத்த மனுநீதி எங்கே?
அநீதியே ஆசனமாய் இங்கே

பெண்சாத்திரத்தை எதிர்த்த எங்கள்
முண்டாசு எங்கே ? சமத்துவம் பேசி
சாத்திரம்வளர்க்கும் சமுகம் இங்கே

சேலைக்காத்த சண்டியர் எங்கே -சல்வாரை
சிறைபிடிக்கும் சண்டாளன் இங்கே
அமைதியின் ஆத்மாக்கள் எங்கே ?
அனுதினமும் போர்கள் இங்கே ...

உழைத்தே வாழ்ந்த சுடர்கள் எங்கே -பிறர்
உழைப்பை சுரண்டும் மூடர்கள் இங்கே
காசேயில்லா கருணை எங்கே ?
செல்லாகாசாய் கருணை இங்கே ...

எழுதியவர் : பிரியாராம் (30-Jul-14, 4:15 pm)
பார்வை : 80

மேலே