மழைதீ
அடைமழையில் நனைவதைவிட
அதிசுகம் அவ்வப்போது
சிரித்தப்படி சிந்திவிட்டு போகும்
சின்னத் சின்னத் தூறல்களில்தான்!!
உன் கோபங்களில்
எழுந்து வருவதெல்லாம்
என் மீதான காதலே....
கடலின் காலடியில்
சங்கமிக்கும் நதிநீராய்
உயிரினில் நுழைகிறேன்
உனக்குள் சங்கமிக்க ...
நீரின்றி போகும் மலர்வனமாய்
நீயின்றி சாகும் என்வாழ்வு !!
அவ்வளவுதான் என்று
முடிவுகட்டுகிறாய்
என் அவ்வளவும் நீதான்
என்பதை அறியாமல் ...
கவிதாயினி நிலாபாரதி