எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

”தமிழ் இலக்கியத் திருவிழா” தினமணி நாளிதழ் நடத்தும் ”தமிழ்...

”தமிழ் இலக்கியத் திருவிழா”

தினமணி நாளிதழ் நடத்தும் ”தமிழ் இலக்கியத் திருவிழா” ஜூன் 21, 22 (சனி மற்றும் ஞாயிறு) அன்று சென்னைப் பல்கலைகழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடைப்பெறுகிறது.

இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர் திரு.அப்துல்கலாம் நிகழ்வுகளை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைப்பார்.

முதல் நாள் நிகழ்வுகள் (ஜூன்21) : பழ.நெடுமாறன், திருச்சி சிவா மற்றும் தமிழருவி மணியன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். அதனுடன் 4 அமர்வுகளாக பல்வேறு பிரபலங்களின் தலைமையில் வெவ்வேறு தலைப்பில் கருத்தரங்கம் நடைப்பெறுகிறது.

இரண்டாம் நாள் நிகழ்வுகள் ( ஜூன்22): பழ.கருப்பையா.தொல்.திருமாவளவன், வைகோ ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். அதனுடன் 4 அமர்வுகளாக பல்வேறு பிரபலங்களின் தலைமையில் வெவ்வேறு தலைப்பில் கருத்தரங்கம் நடைப்பெறுகிறது.

இரண்டு நாள் நடைப்பெறும் தமிழ் இலக்கியத் திருவிழாவில் தமிழ் அமுதம் பருக நமது எழுத்து தளத்திலிருக்கும் நண்பர்கள் இவ்விழாவை பயன்படுத்திக்கொள்ளலாம். குறிப்பாக சென்னை வாழ் எழுத்து.காம் நண்பர்கள் பயன்படுத்திக்கொள்ள அதிக வாய்ப்பு இருக்கிறது. பயன்படுத்திக்கொள்ளுங்கள் தோழர்களே...!

தொடர்புக்கு : 98405 98008, 98411 43048, 98404 54062, 99416 14411.


-இரா.சந்தோஷ் குமார்

நாள் : 20-Jun-14, 1:54 am

மேலே