தேவதைகளின் தவம்

தெய்வங்களை விரும்பும் மனிதர்கள்
தேவதைகளை அவ்வளவு
எளிதில் விரும்புவதில்லை ....

மனிதர்களின் முதல் தவமும்
முழுத் தவமும் இதுவே !

தேவதைகள் எப்போதும்
விரும்பியபடியே வரம் தரவேண்டும்!
மனதில் நினைப்பதை தந்துவிடவேண்டும்
சில கணங்களில் மௌனமாயும்
நின்றிட வேண்டுமென்று கேட்டே ஒரு வரம்


தேவதைகளின்
விழியும் நோக்குவதற்க்கில்லை
வலியும் நோக்குவதற்க்கில்லை..
முகம் நோக்கா கண்கள்
முழுதும் நோக்குவதற்கு மட்டும் மறுப்பதில்லை

வெள்ளைநிற தேவதைகளை தேடியே
கொள்ளை மனிதர்களின் இருவிழித்தவம்
வெள்ளந்தி மனிதர்கள்
மாறிவிட்டார்கள் பச்சோந்தியாய் ......

சாபம் கொடுத்து அனுப்பிவிட்டான்
அந்தக்கடவுள் ....
வரம் கொடுக்கும் மரம் மட்டும்தான் சாகும் வரை
நீங்கள் வாழ்வதற்க்கில்லை என்று !


பிழையாகும் பெண்தேவதை
பிறப்பொன்று வேண்டாம் என்று
இப்போதெல்லாம்
தேவதைகள்அழுகின்றன
வரம் கேட்டு .....
கிடைக்காமல் விழுகின்றன
மண்ணில் மண்டிப்போட்டு ...


கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (8-Nov-14, 6:05 pm)
பார்வை : 117

மேலே