சபாஷ்
ஒத்தடம் கொடுக்கும் எழுத்துக்களில்...
உண்மை இல்லை....
உணர்வில் கலந்த அன்பில்...
பொய்மை இல்லை....
தீவாய் பிரிந்த நம்மில்...
நேர்மை இல்லை....
நாம் கொண்ட உறவில்...
வறுமை இல்லை....
பொய்யாய் போன தேசங்கள்...
கண்டு திகைக்கிறேன்....
மெய்யான வார்த்தை சொல்ல...
மொழியின்றி தவிக்கிறேன்....
அற்பன் உம் நாடகம்...
அத்திறமையை பாராட்டினேன்....
உந்தன் மூச்சு காற்றும் விசம்தான்...
விலகி போகிறேன்....