சாவும் சுகம் தானே……
எழுதிய எழுத்துக்களும்
என்னை நேசிக்கிறது
உன் பெயரை எழுதியதற்காக……!
என்ன தவம் செய்ததோ
என் கண்ணங்கள்
தினமும் செதுக்கிறாய்
உன் உதடு எனும் உளியால்……!
ஏழேழு ஜென்மங்கள்
இந்த பந்தம் வருமாயின்
ஏழே நிமிடத்தில் இறப்பேன் - ஏனென்றால்
உன்னோடு வாழ்வது ஒரு சுகமென்றால்
உனக்காக இறப்பதும் ஒரு சுகம் தானே
என் அன்பே……!