காதல் வலியிது கண்ணிற்கு தெரியாது

என் நிலையை அவள் அரிய விருப்பப்பட்டதில்லை,
அவள் நிலையை நான் அரிந்து வருத்தப்பட்டபோது...

என் முகத்தை அவள் பார்க்க விருப்பப்பட்டதில்லை,
அவள் முகத்தை நான் பார்த்து வியப்படைந்தபோது...

என் பெயரை அவள் உரைக்க விருப்பப்பட்டதில்லை,
அவள் பெயரை நான் உரைக்க கஷ்டபட்டபோது...

என் குரலை அவள் கேட்க விருப்பப்பட்டதில்லை,
அவள் குரலை நான் கேட்டு மெய்மறந்தபோது...

என் நடையை அவள் பார்க்க விருப்பப்பட்டதில்லை,
அவள் நடையை நான் ரசித்து எதிரில் வந்தபோது...

என் கண்ணை அவள் பார்க்க விருப்பப்பட்டதில்லை,
அவள் கண்ணை நான் பார்த்து சிரித்து கொள்ளும்போது...

என் காதலை அவள் அரிய விருப்பபட்டதில்லை,
அவள் காதலை நான் விழியால் கண்டுணர்ந்தபோது...

என் மனதை நானுரைக்க விருப்பப்பட்ட நாளில்,
உன் மணநாள் நானறிந்தேன்.
மனமுடைந்து நானிறந்தேன்.

மருதாணி கோலம் தீட்ட,
உந்தன் கையை நீயும் நீட்ட,
மணக்கோல புடவையுடன் உன்னைக் கண்ட நொடியில்,
பிணமாகிப் போனதம்மா எந்தன் வாழ்க்கை இருளில்.

விருப்பப்பட்ட வாழ்க்கையுடன் நீயும் சென்று விட்டாய்,
விருப்பப்பட்ட வாழ்க்கையிழந்த நானும் என்ன செய்வேன்.

உன் கணவன் உந்தன் கண்ணை கலங்காமல் பார்க்க,
என் கண்ணீர் நான் தருவேன் உந்தன் வாழ்க்கை செழிக்க.

மதம் என்னும் போர்க்களத்தில்
நீயும் நானும் மோத,
காதல் என்னும் வாளெடுத்து,
எந்தன் நெஞ்சை நீயும் குத்த,
மனமுடைந்து நானிறக்க,
மணம் பிடித்து நீ நடக்க,
மரிப்பேனே என்னை.
மறப்பேனோ உன்னை.

அன்பே...!

வாழ்க வளமுடன்.

நாளும் நலமுடன்.

எழுதியவர் : இன்பராஜன் (13-Feb-15, 1:53 am)
பார்வை : 661

மேலே