ராஜா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ராஜா
இடம்:  திருநெல்வேலி
பிறந்த தேதி :  29-Nov-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Feb-2015
பார்த்தவர்கள்:  1119
புள்ளி:  326

என்னைப் பற்றி...

http://www.YouTube.com/channel/UC3OcvN7H1-GdmLbPllAj0Sg என்னுடைய கவிதை சேனல் எல்லோரும் ஆதரவு தருமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்

என் படைப்புகள்
ராஜா செய்திகள்
ராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Aug-2020 12:04 pm

சிறகின்றி

மேலும்

ராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Aug-2020 11:36 am

எப்பொழுதும்

எனக்கும் காகிதத்திற்கும்

சண்டை வரும்

உன்னிடம்

காண்பிப்பதற்கு முன்பே

கவிதையை

படித்துவிடுகிறாள் என்று....!!!!!

மேலும்

ராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Aug-2020 11:33 am

அழகின் வடிவம் கண்டு
அளவில்லா ஆனந்தத்தில்
அடியேனின் எழுதுகோலும்
ஆர்ப்பரித்துக்கொண்டது
அருள்வேலனை அலங்கரிக்க

எனைக்காத்து
எந்தன் சிந்தையில்
எப்பொழுதும் வீற்றிருக்கும்
எம்பரம்பொருளே
என் முருகனே

தினமும் எனை எழுப்பும்
முதல் பறவை கொண்டவனே
வேட்டைக்கும் வேளாண்மைக்கும்
முதல் காவலனே - என்
மானம் காத்தவனே

மூத்தவனே முதல் குடியோனே
தமிழ் கடவுளின் ஆதவனே
தாமரையில் தவழும் ஆறுமுகனே
என் முருகப்பெருமானே
உனை தினமும் தொழவந்தேனே

உன் கவசம் எனைக்காத்திட
உனை நித்தம் பாடிட
ஓம் சரவணபவனே
என திருநாமம் ஒலித்திட
செந்தூரில் உனை சரணடைவேனே...!!!

மேலும்

தமிழ் கடவுளை போற்றும் பக்தி ரசம் ததும்பும் கவிதை . அருமை . 14-Aug-2020 4:24 pm
கவிதை அழகு அருமை.. வேலும் மயிலும் துணை 14-Aug-2020 12:02 pm
ராஜா - ராஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Jul-2016 12:29 pm

இதமான வெப்பம்
என் மீது பட
காலம் நேரம் பாராமல்
காதலில் பிள்ளை
இசைந்து இச்சையில் மிதக்கிறேன்

பிரியாமல் இருக்கும்
தாமரை மொட்டை
மெல்ல சுவைத்து
ஒட்டுண்ணி போல் ஒட்டி
தொட்டாசிணிங்கியாகவும் சுருங்குகிறேன்

இந்த நிகழ்வு தொடர்ந்தே இருக்க
மழலையாக அடம் பிடிக்க
இடைவெளி விலகி நிற்க
தருணம் கொஞ்சி சிணுங்க
உன் பெயரை மட்டுமே மொழியாகவும் கொண்டது.......!!!!

மேலும்

அடுத்த தருணத்தை எதிர்பார்த்து மனம் காத்திருக்கட்டும். 09-Jul-2016 5:42 pm
ராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
02-May-2017 10:52 am

வானுலக தேவர்களே
வந்து பாருங்கள் எங்கள் நடனத்தை
தில்லையுடன் போட்டிபோடும்
நெல்லை பெண்கள் நாங்கள்
காற்றுக்கு கடிவாளமின்றி
கற்றுக்கொடுக்கிறோம் பறப்பதற்கு
நீர்வீழ்ச்சி ஓட்டம் கண்டிருப்பீர்கள்
நிலவின் இருசுழற்சி ஓட்டத்தை
நிலத்தில் காண வருவீர்

தித்திக்கும் இசைகளே
திமிரோடு வாருங்கள்
திருநெல்வேலி கம்பீரத்தை
தவறாமல் காட்டுவோம்
திகட்டாத அபிநயங்களை
சிட்டுகுருவிக்கும் கற்றுக்கொடுப்போம்
சின்னஞ்சிறு வளைவுகளை நெளிவுகளை
தாமிரபரணிக்கு விலை பேசுவதை
திருவிழா போல காண வருவீர்

அண்டவுலகத்தை ஆளும்
ஆதிபராசக்திதே அன்னையே வருவீர்
அலங்காரங்கள் மொத்தமாக
ஆசைகொண்டு இருக்கும் இடமெல்லாம்
ஆட்கொண்டது மி

மேலும்

ராஜா அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
20-Jun-2016 7:27 am

விழிகள் செய்யும்
தவம் உனக்கு கேட்கவில்லையா
சுவாசமின்றி தவிக்கும்
உணர்வு உனக்கு வந்துசேரவில்லையா
இதழ்கள் வறண்டு
பாலைவனமானது உனக்கு அனல்காற்று வீசவில்லையா
காதல் காய்ந்து
தன்னந்தனியா நிற்பது உனக்கு தூதுவரவில்லயா

எனக்கும் நம் காதலுக்கும்
வசந்தம் வீச
உன் விழியின் சிறையில்
எனை அடைக்க
எண்ணமில்லையா
வா வா என் கண்ணம்மா
உருகுகிறேன் நீயின்றி
உண்மை நீயில்லாததலால்
நிழல் தவித்து தள்ளாடுது.......!!!

மேலும்

காதலின் தோரணங்கள் காணும் இடமெல்லாம் தொடர்கிறது 20-Jun-2016 1:36 pm
தனிமையின் ஏக்ங்கள் காதலில் அழகு வாழ்த்துக்கள் ..... 20-Jun-2016 10:42 am
மிக்க நன்றி 20-Jun-2016 9:33 am
நல்லாருக்கு ...தொடருங்கள் 20-Jun-2016 9:00 am
ராஜா அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
20-Jun-2016 7:29 am

நித்தம் நீ வேண்டும் - என்
நித்திரை கலைத்திடவும்
நீ வேண்டும்

விரல்கள் பிரிந்து தவிக்க
விரசலா வந்து இணைந்திட
வான்மதியே நீ வேண்டும்

மேனியெங்கும் ரோமங்கள் பரவிட
மேடு பள்ளமின்றி ஒன்றாக ஒன்றிட
மேலுலக தேவதையே நீ வேண்டும்

காலை மலர
கதிரவன் இசைத்திட
கருவிழி முத்தம் தந்திட
கண்ணம்மா நீ வேண்டும்.....!!!

மேலும்

மிக்க நன்றி 23-Jun-2016 8:28 am
மிக்க நன்றி 23-Jun-2016 8:27 am
மிக்க நன்றி 23-Jun-2016 8:27 am
அவளின் வரவிற்காகவே இதய அலுவலகம் பணிபுரிகிறது 24 மணிநேரமும்! சிறந்த வரிகள்! வாழ்த்துக்கள் நண்பரே! 20-Jun-2016 9:41 pm
ராஜா - ராஜா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jun-2016 7:34 pm

இசை மீட்டும் குரலில்
பாடும் உன் மொழியில்
தமிழ் மொழியில் மயங்கி
உனை எனக்கு சொந்தமாக்கிய
நான் ஒரு சுயநலவாதி - ஆம்
காதல் சுயநலவாதி

நிழல் போல் உனை தொடரும்
என் நிஜம் நீயானபோது
வினாடிகள் கூட
எனை மறக்ககூடாதென்று என்னும்
நான் ஒரு சுயநலவாதி - ஆம்
காதல் சுயநலவாதி

தனிமையில் எனை ரசித்து இசைந்து
கவிதை இயற்றும் உன் கருவிழி
எனக்காக மட்டுமே
இமைக்க வேண்டுமென்று என்னும்
நான் ஒரு சுயநலவாதி - ஆம்
காதல் சுயநலவாதி

நீ பாதி நான் பாதியானோம்
என் பிம்பம் நீயாக
உன் பிம்பம் நானாக கலந்தோம்
நம் ரேகைகள் பிரிந்துவிடக்கூடாது என்னும்
நான் ஒரு சுயநலவாதி - ஆம்
காதல் சுயநலவாதி ............!

மேலும்

காதல் தன்னை மறந்து அதையே நினைத்திடச் செய்யும் வாழ்த்துக்கள் .... 20-Jun-2016 11:12 am
மிக்க நன்றி 20-Jun-2016 7:25 am
இதுவும் காதலை பொறுத்த வரை ஆரோக்கியம் நிறைந்தது தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Jun-2016 5:24 am
ராஜா - ராஜா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jun-2016 7:35 pm

உன் கை
என் முதுகை தழுவ
மற்றொன்று
என் தோல்பட்டையில்
உன் முட்டி பதிய
விரல்கள் தலைமுடியை
உன் ஆசைபடி கலைக்க
அதில் மெல்ல மெல்ல
நான் கிறங்க
கருவிழி மொத்தம்
உனை தேட
எனை முழுவதும்
தின்றுதீத்திட
காதல் பூசி
கொஞ்சம் அனைப்பாயா ..!!!

மேலும்

மிக்க நன்றி 20-Jun-2016 7:19 am
இரு உடலும் உயிரனே உறைந்திடும் பரிசம் காதலின் தோரணம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Jun-2016 5:25 am
ராஜா - ராஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Jun-2016 6:34 am

எரியும் தீ காற்றில் கரைய
ஏங்கும் என் மனது உன் நினைவில் பறக்க
எங்கும் உன் பிம்பம் தோன்றி மறைய
என் முகம் உன் சேலை தலைப்பில் மூழ்க

வாசனையின்றிய பூவானேன்
வைட்டமின் இல்லாத சூரியனுமானேன்
நிலவில்லா வானமானேன்
நீரில்ல பூமியுமானேன்

சத்தமில்லா ஒலியுமானேன்
சலங்கையில்லா நாட்டியமானேன்
சுதந்திரமில்லா கைதியானேன்
சுவரில்லா சித்திரமுமானேன்

மறுமலர்ச்சில்லா தரிசானேன்
மலரில்லா மரமானேன்
தாலாட்டில்லா குழந்தையானேன்
தனிமையின் இளவரசனுமானேன்

காலம் கொடுத்த அழைப்பிதழை
கனவின்றி நிஜமாக்கினாய்
காதல் பாடும் கவிதையை
கால்கடுக்க நிற்கவிட்டுசென்றாயே

இது நியாயமா இளநெஞ்சி தாங்குமா
இனியும் தொடருமா இன்ன

மேலும்

காதல் ஒன்று பிறந்து விட்டால் மலர்ந்திடும் கவிதைகள் பிரிவுதான் வந்து விட்டால் நீளுமே நினைவுகள் ! இன்னும் கனவு காணுங்கள் தொடரட்டும் பதிவுகள்... 25-Jun-2016 11:26 pm
ஏகாந்தத்தின் சுமைகளை சித்தரிக்கும் வரிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Jun-2016 1:31 pm
மிக்க நன்றி 20-Jun-2016 7:17 am
காதல் தரும் மாயங்கள் வானவில்லாய் வந்து வானமாய் தனிமையில் ஏக்கம். வாழ்த்துக்கள் .... 20-Jun-2016 6:59 am
ராஜா - ராஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Jun-2015 2:11 pm

எருதுக் கொண்டு உழுது
ஏழு மரக்கால் விதையிட்டு
ஏழ்மையை விரட்ட
ஏலேழு ஜென்மமாக போராடும்
என் பெயர் விவசாயிங்க

பூமிப்பார்த்த மண்ணை வான் பார்க்க வைத்து
பூமா தேவிக்கு உரமிட்டு காத்து
புல்லின்றி களையின்றி வளர்த்து
பலனின்றி உழைக்கும்
பாவம் செய்த விவசாயிங்க

வெயிலைக் குடையாகக் கொண்டு
வெண்மேகத்தைக் கார்மேகத்திற்கு தத்துக்கொடுத்து
வளர்ப்பிறையில் வாழ வைத்து
வெறும் வயிற்றில் பாடுப்படும்
வெள்ளை மனசுக் கொண்ட விவசாயிங்க

கனவுகள் சிலக் கண்டு
கடன்கள் பல வாங்கி - பெண்ணை
கரைச்சேர்க்கும் தகப்பனைப் போல்
கைக்குள்ளே பொத்தி வளர்த்த நெல்மணியை
கதிர் அறுவடை செய்யும் விவசாயிங்க

வணிகம் செய்ய தெரியாத

மேலும்

நன்றி தோழியே 14-Jun-2015 2:05 pm
நல்ல படைப்பு நட்பே.....வாழ்த்துக்கள்.... 14-Jun-2015 2:02 pm
மிக்க நன்றி 14-Jun-2015 1:53 pm
நன்றி 14-Jun-2015 1:53 pm
சந்திரா அளித்த படைப்பை (public) கார்த்திகா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
16-Mar-2015 10:32 pm

நாற்பது வருடம் வாழ்ந்து முடித்த கணவனும் மனைவியும் அதை கொண்டாடும் விதமாக நன்பர்களுக்கு ஒரு விருந்து கொடுத்தனர்.

விருந்தில் கலந்து கொண்ட அனைவரும் கேட்ட கேள்வி.

நீங்கள் எப்படி இவ்வளவு ஒற்றுமையாக இருந்தீர்கள் இவ்வளவு நாளும் ? என்று.

அதற்கு அந்த தம்பதிகள் கொடுத்த பதில் "நான் எனது கனவரின் சுதந்திரத்தில் தலையிட்டதே இல்லை. அது தான் காரணம்!” என்று.

அன்று இரவு படுக்கையில் மனைவி கணவனிடம் "இதுவரை உங்கள் சுதந்திரத்தில் தலையிட்டதே இல்லை.. இன்று நீங்கள் மறைத்த உண்மை ஒன்று சொல்லுங்களேன்” என்று கேட்டாள்.

கணவன் படுக்கைக்கு அடியிலிருந்த ஒரு பெட்டியை எடுத்து கட்டில் மேல் திறந்து வைத்தான்.

உள்ளே

மேலும்

மன்னிக்கவும் தோழி, இதே கதையமைப்பு, இதே கருத்து, எந்த மாற்றமும் இல்லாமல் நான் முன்னமே படித்திருக்கிறேன். ஆண்ட்ராய்டு மொபைலில், பிளே ஸ்டோரில், டர்ட்டி ஜோக்ஸ் அப்ளிகேஷனில் இந்த நகைச்சுவை இப்பொழுதும் காணக் கிடைக்கறது. 13-May-2015 1:04 pm
கருப்பொருள் palaiyathu. athilirunthu uruvakiya kathai puthiyathu. 11-May-2015 8:40 pm
வாழ்த்துக்கு நன்றிகள் 11-May-2015 8:39 pm
வாழ்த்துக்கு நன்றிகள் 11-May-2015 8:38 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (32)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
விஷாநிதி ரா

விஷாநிதி ரா

தூத்துக்குடி

இவர் பின்தொடர்பவர்கள் (34)

வடிவேலன்-தவம்

வடிவேலன்-தவம்

திருச்சி
பிரியாராம்

பிரியாராம்

கிருட்டினகிரி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (34)

கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
மேலே