விவசாயிங்க ………

எருதுக் கொண்டு உழுது
ஏழு மரக்கால் விதையிட்டு
ஏழ்மையை விரட்ட
ஏலேழு ஜென்மமாக போராடும்
என் பெயர் விவசாயிங்க

பூமிப்பார்த்த மண்ணை வான் பார்க்க வைத்து
பூமா தேவிக்கு உரமிட்டு காத்து
புல்லின்றி களையின்றி வளர்த்து
பலனின்றி உழைக்கும்
பாவம் செய்த விவசாயிங்க

வெயிலைக் குடையாகக் கொண்டு
வெண்மேகத்தைக் கார்மேகத்திற்கு தத்துக்கொடுத்து
வளர்ப்பிறையில் வாழ வைத்து
வெறும் வயிற்றில் பாடுப்படும்
வெள்ளை மனசுக் கொண்ட விவசாயிங்க

கனவுகள் சிலக் கண்டு
கடன்கள் பல வாங்கி - பெண்ணை
கரைச்சேர்க்கும் தகப்பனைப் போல்
கைக்குள்ளே பொத்தி வளர்த்த நெல்மணியை
கதிர் அறுவடை செய்யும் விவசாயிங்க

வணிகம் செய்ய தெரியாதுங்க
வாய்ப் பொத்தி அழத்தான் தெரியும்ங்க
வாழத் தெரியவில்லையென்று
வாய்க்கரசிப் போட்டுவிடாதீர்கள் – உங்கள்
வெளிநாட்டு மோகத்திற்குகாக - தன் சொத்தையே
விற்கும் விபச்சாரியாக மாற்றிவிடாதீர்கள் எங்களை ….!

எழுதியவர் : ராஜா (13-Jun-15, 2:11 pm)
பார்வை : 113

மேலே