சுதந்திரம்
பளிச்சிடும் விளக்குகள்
செம்மை நிறம் துறந்து
பசுமைக்கு இடம் பெயரும்
இரு நிமிட இடைவெளியில்
இருக்கையில் அமர்ந்த கண்ணாடி
கதவுகளால் சிறைபிடிக்கப்பட்ட குழந்தை
பொறாமை கொள்கிறது இரவலன் மழலை மீது
தன் நிலை நொந்து
ஏங்குகிறது அக்கறை சுதந்திரத்திற்கு
அடுத்த வேளை அன்னத்திற்கு
அலையும் அன்றாட வேதனை
அது அறிவதில்லை அறியாமையினால்
பிழைப்பே பிழையாகி போன
இருண்ட குழந்தைக்கு ஏனோ
கண்ணாடி கதவுகள் தாண்ட ஆசையில்லை
ஆறறிவினால் அறிந்திருக்கும் அது
சொர்கங்களோடு வருவதில்லை என்று