பூஜ்யா - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : பூஜ்யா |
இடம் | : banglore |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 21-May-2015 |
பார்த்தவர்கள் | : 56 |
புள்ளி | : 7 |
புதுகவிதைகள் எழுத பிடிக்கும்
அடம் பிடித்து
விழுந்து புரண்டுப் போராடி
கண்ணீர் ஆயுதங்கள் உபயோகித்தும்
தோற்றுப் போன இரவு போர்கள்
பரணி இலக்கியத் தலைவன் போல
அம்மா தோரணையோடு வீற்றிருந்தாள்
அரும்பிற்கோ போர்க்காயமாய் பால் மீசை
மளிகைச் சீட்டு மாயம் போனதால்
மதியமெல்லாம் தேடி திரிந்தவளிடம்
மின்மினி கண்கள் அகல விரித்து
தன் காகிதக்கப்பல் சுட்டிக் கேட்டான்
தொலைந்தது மிதப்பதா என்று
கலைக்கூடம் ஒன்றனில் கண்வியக்கும்
ஓவியம் ஒன்றனை அப்பா வாங்கிவர
வீட்டைச் சுற்றி இருக்கும் சிற்றாரிடம்
சிலபல தூரிகைகள் , வண்ணங்கள்
கடன்வாங்கி , தன் திறன் முதலீட்டினில்
சுவரோவியம் வரைந்து வைத்து காத்திருந்தான்
தந்தையின் மு
காலத்தின் கடிகாரங்கள் கண்டுபிடித்து
நேரத்தின் முட்கள் பின்தள்ளி
காவியக் காலங்கள் சென்று
காண்டீப வில் கடன்வாங்கி
உன்காந்த கண்கள் வரைந்திருப்பான்
அடர்ந்த காடுகள் உள்புகுந்து
அத்துனை மலர்கள் ஆராய்ந்து
அந்தி வேளை அகலும்வரை
அயராது வாசம்தரும் பூக்கள்பறித்து
உன்மென் முகம் வடித்திருப்பான்
பரந்த வானங்கள் மேல்சென்று
வெண் மேகங்கள் புறந்தள்ளி
கார் முகில்கள் தேடி
குயில் சிறகுகள் சேகரித்து
உங்கருங் குழல் தொடித்திரிப்பான்
வளங்கள் எல்லாம் வடிந்துபோனாலும்
வருந்தாமல் விண்மீன்கள் விலைக்குவாங்கி
செவ்விதழில் பதுக்கி வைத்து
புன்னகையின் பொழுதெல்லாம் சிதறவைத்தான்
படைத்தபின் பெருமூச்சு விட்டு
கவிதைகள் எல்லாம்
மாயஜாலக்காரிகளாக இருந்திருக்கலாம்
தங்களின் வரவுகளையும் போக்குகளையும்'
தாமே கணித்து இருக்கும்
கைபிடித்து மைவடித்து
மெய் தொடுத்த வார்த்தைகளை
நேரம் அறிந்து படைத்திருக்கும்
பக்கம் புதிது ஒன்றில் தொடங்கிய
கவி ஒன்று இறுமாப்பு கொள்கிறது
இறுதி பக்கத்தினில் இடமில்லாமல்
கிறுக்கப்பட்ட கவிதை கண்டு
தலைப்பிட்டு தைரியமாக தொடங்கப்பட்ட தான்
தரமாக முடிக்கபடுவேன் என்று
தனக்கு தானே நினைத்து கொள்கிறது
தடுமாறி தடம் மாறிய கவிதைகள்
தாழ்ந்து போய் தவித்து போகிறது
தன்னிலை அறிந்து துடித்து போகிறது
திருத்தி அமைக்ககூட நேரமில்லாமல்
பிழை அறியாது மனம் போன போக்கில்
ப
பளிச்சிடும் விளக்குகள்
செம்மை நிறம் துறந்து
பசுமைக்கு இடம் பெயரும்
இரு நிமிட இடைவெளியில்
இருக்கையில் அமர்ந்த கண்ணாடி
கதவுகளால் சிறைபிடிக்கப்பட்ட குழந்தை
பொறாமை கொள்கிறது இரவலன் மழலை மீது
தன் நிலை நொந்து
ஏங்குகிறது அக்கறை சுதந்திரத்திற்கு
அடுத்த வேளை அன்னத்திற்கு
அலையும் அன்றாட வேதனை
அது அறிவதில்லை அறியாமையினால்
பிழைப்பே பிழையாகி போன
இருண்ட குழந்தைக்கு ஏனோ
கண்ணாடி கதவுகள் தாண்ட ஆசையில்லை
ஆறறிவினால் அறிந்திருக்கும் அது
சொர்கங்களோடு வருவதில்லை என்று
கண்ணீர் துளிகளுக்கு வண்ண
குறிப்பு இருந்திரிக்க வேண்டும்
வாசல் தாண்டி
விடைபெற்று வெளிநடக்கும் நேரம்
கண்கள் காதில் சொல்லியனுப்பும்
தூரிகையால் கைகள் நனைக்கும்
விரல்கள் பிடித்து விளக்கங்கள் சொல்லும்
வழிந்தோடும் பாதையினில்
விலகாமல் கன்னம் சேர
வண்ணங்கள் மட்டும் இருந்திரிந்தால்
பார்த்திருப்பாய் !
வானவில் என் கண்களில்
நீ திரையில் விழும்பொழுது
கவிதைகள் எல்லாம்
மாயஜாலக்காரிகளாக இருந்திருக்கலாம்
தங்களின் வரவுகளையும் போக்குகளையும்'
தாமே கணித்து இருக்கும்
கைபிடித்து மைவடித்து
மெய் தொடுத்த வார்த்தைகளை
நேரம் அறிந்து படைத்திருக்கும்
பக்கம் புதிது ஒன்றில் தொடங்கிய
கவி ஒன்று இறுமாப்பு கொள்கிறது
இறுதி பக்கத்தினில் இடமில்லாமல்
கிறுக்கப்பட்ட கவிதை கண்டு
தலைப்பிட்டு தைரியமாக தொடங்கப்பட்ட தான்
தரமாக முடிக்கபடுவேன் என்று
தனக்கு தானே நினைத்து கொள்கிறது
தடுமாறி தடம் மாறிய கவிதைகள்
தாழ்ந்து போய் தவித்து போகிறது
தன்னிலை அறிந்து துடித்து போகிறது
திருத்தி அமைக்ககூட நேரமில்லாமல்
பிழை அறியாது மனம் போன போக்கில்
ப
காலத்தின் கடிகாரங்கள் கண்டுபிடித்து
நேரத்தின் முட்கள் பின்தள்ளி
காவியக் காலங்கள் சென்று
காண்டீப வில் கடன்வாங்கி
உன்காந்த கண்கள் வரைந்திருப்பான்
அடர்ந்த காடுகள் உள்புகுந்து
அத்துனை மலர்கள் ஆராய்ந்து
அந்தி வேளை அகலும்வரை
அயராது வாசம்தரும் பூக்கள்பறித்து
உன்மென் முகம் வடித்திருப்பான்
பரந்த வானங்கள் மேல்சென்று
வெண் மேகங்கள் புறந்தள்ளி
கார் முகில்கள் தேடி
குயில் சிறகுகள் சேகரித்து
உங்கருங் குழல் தொடித்திரிப்பான்
வளங்கள் எல்லாம் வடிந்துபோனாலும்
வருந்தாமல் விண்மீன்கள் விலைக்குவாங்கி
செவ்விதழில் பதுக்கி வைத்து
புன்னகையின் பொழுதெல்லாம் சிதறவைத்தான்
படைத்தபின் பெருமூச்சு விட்டு