முடிவுபெறாத கவிதைகள்
கவிதைகள் எல்லாம்
மாயஜாலக்காரிகளாக இருந்திருக்கலாம்
தங்களின் வரவுகளையும் போக்குகளையும்'
தாமே கணித்து இருக்கும்
கைபிடித்து மைவடித்து
மெய் தொடுத்த வார்த்தைகளை
நேரம் அறிந்து படைத்திருக்கும்
பக்கம் புதிது ஒன்றில் தொடங்கிய
கவி ஒன்று இறுமாப்பு கொள்கிறது
இறுதி பக்கத்தினில் இடமில்லாமல்
கிறுக்கப்பட்ட கவிதை கண்டு
தலைப்பிட்டு தைரியமாக தொடங்கப்பட்ட தான்
தரமாக முடிக்கபடுவேன் என்று
தனக்கு தானே நினைத்து கொள்கிறது
தடுமாறி தடம் மாறிய கவிதைகள்
தாழ்ந்து போய் தவித்து போகிறது
தன்னிலை அறிந்து துடித்து போகிறது
திருத்தி அமைக்ககூட நேரமில்லாமல்
பிழை அறியாது மனம் போன போக்கில்
பேனாவின்றி பேரின்பத்தில் எழுதிய கவிதை கண்டு
பௌர்ணமி போன்று தொடங்கப்பட்டு பின்
தேய் பிறையாய் நிறுத்தப்பட்ட வரிகள் வருந்துகின்றன
தேக்கப்பட்ட வார்த்தைகள் தேடி தொலைந்ததால்
நீயும் முடிவு பெறாத கவிதைஎன்று
முதலே அறிந்திருந்தால் தொடங்கி இருக்கவே மாட்டேன்
பல நிறைவு பெறா கவிதைகளை
உன்னில் தொடங்கி ....
நான் மாயஜாலக்காரியாக இருந்திருக்கலாம்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
