இந்த முறை ஓ கே

முகநூல்,
டுவிட்டர்,
வாட்சப்,
வலைப்பூ..
எல்லாவற்றிலும் புகுந்து
கலக்கிக் கொண்டிருக்கும்
கதிரேசன் தன்
கழுத்தை சாய்த்து
தோளில் தாங்கி
கைப்பேசியில்
பேசியபடி
பைக்கை ஓட்டியபோது..
முகநூலில் வந்த அவனது
"விதி" என்ற கவிதைக்கு
எமன் கொடுத்த
லைக்
நெட்வொர்க்
பிரச்னையால்
பதிவாகாமல் போனதில்
கதிரேசன்..
தப்பித்துக் கொண்டான்..
அன்று!
நெட்வொர்க்
எப்போதும் அப்படியில்லை!

எழுதியவர் : கருணா (13-Jun-15, 2:23 pm)
Tanglish : intha murai ok
பார்வை : 3307

சிறந்த கவிதைகள்

மேலே