நிழல் தவித்து தள்ளாடுது

விழிகள் செய்யும்
தவம் உனக்கு கேட்கவில்லையா
சுவாசமின்றி தவிக்கும்
உணர்வு உனக்கு வந்துசேரவில்லையா
இதழ்கள் வறண்டு
பாலைவனமானது உனக்கு அனல்காற்று வீசவில்லையா
காதல் காய்ந்து
தன்னந்தனியா நிற்பது உனக்கு தூதுவரவில்லயா

எனக்கும் நம் காதலுக்கும்
வசந்தம் வீச
உன் விழியின் சிறையில்
எனை அடைக்க
எண்ணமில்லையா
வா வா என் கண்ணம்மா
உருகுகிறேன் நீயின்றி
உண்மை நீயில்லாததலால்
நிழல் தவித்து தள்ளாடுது.......!!!

எழுதியவர் : ராஜா (20-Jun-16, 7:27 am)
பார்வை : 119

மேலே