என் கண்ணம்மாவே
மஞ்சள் பூசி மடிசாரணிந்து
மயிலிறகால் வருடிச்சென்றாய்
சிந்திய மழைதுளி கொண்டு
சில்லென்று நனைத்தும்சென்றாய்
தெரிந்த பாகம் தென்றலாக வீச
தெரியாத பாகம் வேர்வையால் பூச
கட்டிய சேலை கணுகாலுவரை மூட
காதோர ஈரம் மெல்ல கரையை கடக்க
பற்சையின் சுவையில் தேன் சிந்தியதோ
பரவியகிடத்த இதழில் பள்ளிகொண்டேனே
ஓராயிரம் ஓவியம் ஓர் விழியால் வரைந்தாயோ
ஒவ்வொரு ரோமமா காதலும் செய்தேனே
என் கண்ணம்மாவே.....!!!

