காதல் சுயநலவாதி

இசை மீட்டும் குரலில்
பாடும் உன் மொழியில்
தமிழ் மொழியில் மயங்கி
உனை எனக்கு சொந்தமாக்கிய
நான் ஒரு சுயநலவாதி - ஆம்
காதல் சுயநலவாதி

நிழல் போல் உனை தொடரும்
என் நிஜம் நீயானபோது
வினாடிகள் கூட
எனை மறக்ககூடாதென்று என்னும்
நான் ஒரு சுயநலவாதி - ஆம்
காதல் சுயநலவாதி

தனிமையில் எனை ரசித்து இசைந்து
கவிதை இயற்றும் உன் கருவிழி
எனக்காக மட்டுமே
இமைக்க வேண்டுமென்று என்னும்
நான் ஒரு சுயநலவாதி - ஆம்
காதல் சுயநலவாதி

நீ பாதி நான் பாதியானோம்
என் பிம்பம் நீயாக
உன் பிம்பம் நானாக கலந்தோம்
நம் ரேகைகள் பிரிந்துவிடக்கூடாது என்னும்
நான் ஒரு சுயநலவாதி - ஆம்
காதல் சுயநலவாதி ............!

எழுதியவர் : ராஜா (19-Jun-16, 7:34 pm)
பார்வை : 78

மேலே