பரதம்

வானுலக தேவர்களே
வந்து பாருங்கள் எங்கள் நடனத்தை
தில்லையுடன் போட்டிபோடும்
நெல்லை பெண்கள் நாங்கள்
காற்றுக்கு கடிவாளமின்றி
கற்றுக்கொடுக்கிறோம் பறப்பதற்கு
நீர்வீழ்ச்சி ஓட்டம் கண்டிருப்பீர்கள்
நிலவின் இருசுழற்சி ஓட்டத்தை
நிலத்தில் காண வருவீர்

தித்திக்கும் இசைகளே
திமிரோடு வாருங்கள்
திருநெல்வேலி கம்பீரத்தை
தவறாமல் காட்டுவோம்
திகட்டாத அபிநயங்களை
சிட்டுகுருவிக்கும் கற்றுக்கொடுப்போம்
சின்னஞ்சிறு வளைவுகளை நெளிவுகளை
தாமிரபரணிக்கு விலை பேசுவதை
திருவிழா போல காண வருவீர்

அண்டவுலகத்தை ஆளும்
ஆதிபராசக்திதே அன்னையே வருவீர்
அலங்காரங்கள் மொத்தமாக
ஆசைகொண்டு இருக்கும் இடமெல்லாம்
ஆட்கொண்டது மின்னும் மேனியெங்கும்
கிழக்கில் உதிக்கும் சூரியனின் கர்வத்தையும்
கட்டுமஸ்தான உடல்வாகு பெற்ற
ஆடவர்களின் கர்வத்தையும்
தோற்கடிக்கும் அழகினை காண வருவீர்

என்ன இல்லை ஏது இல்லை
கருவிழியின் கவர்ச்சியும் பேராசையும்
கண்ணனின் புல்லாங்குழலும் ராதையும்
காட்சியின் தத்ரூபத்தையும் கற்பனையும்
கவியின் அழகும் ஓவியமும்
மொழியின் ஆனந்தமும் கோபமும்
எல்லோரையும் அழைத்து
எல்லையில்லா இன்பத்தை
அமிர்தமாக ஊட்டிவிட
பரதம் உங்களை அழைக்கிறது வருவீர்......!!!

எழுதியவர் : ராஜா (2-May-17, 10:52 am)
சேர்த்தது : ராஜா
Tanglish : paratham
பார்வை : 193

மேலே