இதழின் ஈரம் உயிரோடு வாழுமா

எரியும் தீ காற்றில் கரைய
ஏங்கும் என் மனது உன் நினைவில் பறக்க
எங்கும் உன் பிம்பம் தோன்றி மறைய
என் முகம் உன் சேலை தலைப்பில் மூழ்க

வாசனையின்றிய பூவானேன்
வைட்டமின் இல்லாத சூரியனுமானேன்
நிலவில்லா வானமானேன்
நீரில்ல பூமியுமானேன்

சத்தமில்லா ஒலியுமானேன்
சலங்கையில்லா நாட்டியமானேன்
சுதந்திரமில்லா கைதியானேன்
சுவரில்லா சித்திரமுமானேன்

மறுமலர்ச்சில்லா தரிசானேன்
மலரில்லா மரமானேன்
தாலாட்டில்லா குழந்தையானேன்
தனிமையின் இளவரசனுமானேன்

காலம் கொடுத்த அழைப்பிதழை
கனவின்றி நிஜமாக்கினாய்
காதல் பாடும் கவிதையை
கால்கடுக்க நிற்கவிட்டுசென்றாயே

இது நியாயமா இளநெஞ்சி தாங்குமா
இனியும் தொடருமா இன்னும் நீளுமா
இதழின் ஈரம் உயிரோடு வாழுமா
இப்போது நான் நிற்கிறேன் பாவமா ......!!!!

எழுதியவர் : ராஜா (20-Jun-16, 6:34 am)
பார்வை : 142

மேலே