தடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 2--முஹம்மத் ஸர்பான்

11.பாழடைந்த வீட்டின் பூட்டினை உடைத்து
கூரையை அலங்கரிக்கிறது சிலந்தி வலைகள்

12.வாழ்க்கை என்ற ஆகாயத்தில் நூல் அறுந்த
காற்றாடியாய் பறந்து செல்கிறது உள்ளம்

13.பார்வையிழந்தவன் வரைந்த ஓவியமும் முகவரியிழந்த
பாதையின் பிச்சைப் பாத்திரத்தில் விருதுகளை பெறுகிறது

14.உதிர்ந்த இலைகளின் முகப்பில் பூக்கள் தெரிந்தும்
குற்றவாளி சிறைக் கூண்டில் காற்றின் நாமங்கள்

15.தகுதியுடைவன் இட்ட கனவுகளின் அடித்தளத்தில்
தகுதியற்றவன் மாளிகை நிலையின்றி தள்ளாடுகிறது

16.கடலில் தொலைந்த முத்துக்களை தேடுகையில்
உரிமையிருந்தும் ஊமையாய் போனது நியாயங்கள்

17.தொட்டிலிட்ட சந்தியில் தாலாட்ட யாருமில்லை
கூட்டத்தின் பந்தியில் உட்கார தகுதியுமில்லை

18.எரிநட்சத்திரங்களால் பிரகாசிக்கும் மூங்கில் காடுகள்
தென்றலின் உரசலில் யுத்தம் செய்து சாம்பளாகிறது

19.மண்புழுவின் மண்டையோட்டு ஆய்வு கூடத்தில்
மண்ணறையின் மண்ணுடல் பல்லின அணுக்கள்

20.பாழடைந்த தண்டவாளத்தில் எறும்பின் பயணங்கள்
ஊழியமின்றி பச்சைக் கொடி அசைக்கும் இலைகள்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (20-Jun-16, 5:15 am)
பார்வை : 152

மேலே