முருகன் துணை
அழகின் வடிவம் கண்டு
அளவில்லா ஆனந்தத்தில்
அடியேனின் எழுதுகோலும்
ஆர்ப்பரித்துக்கொண்டது
அருள்வேலனை அலங்கரிக்க
எனைக்காத்து
எந்தன் சிந்தையில்
எப்பொழுதும் வீற்றிருக்கும்
எம்பரம்பொருளே
என் முருகனே
தினமும் எனை எழுப்பும்
முதல் பறவை கொண்டவனே
வேட்டைக்கும் வேளாண்மைக்கும்
முதல் காவலனே - என்
மானம் காத்தவனே
மூத்தவனே முதல் குடியோனே
தமிழ் கடவுளின் ஆதவனே
தாமரையில் தவழும் ஆறுமுகனே
என் முருகப்பெருமானே
உனை தினமும் தொழவந்தேனே
உன் கவசம் எனைக்காத்திட
உனை நித்தம் பாடிட
ஓம் சரவணபவனே
என திருநாமம் ஒலித்திட
செந்தூரில் உனை சரணடைவேனே...!!!