இருந்து மில்லா நிலையிது

அரிதாரம் பூசிக் கொண்டு
>>>பாசம் வேஷம் போடுது !
உரிமையான உறவும் கூட
>>>உடுக்கை அடித்து நகைக்குது !

எரியும் உள்ளம் கனல்கக்க
>>>எண்ணெய் இன்னும் ஊற்றுது !
சரிந்த மனம் சோர்வுற்று
>>>சலித்து ஏங்கித் தவிக்குது !

சிரிக்க மறந்து கவலையினால்
>>>வதனம் வாடிப் போகுது !
செரிக்கவில்லை உண்ட உணவும்
>>>ஏச்சு காதில் ஒலிக்குது !

திரித்து பேசி நடிப்பவர்க்கு
>>>காலம் நல்லா நடக்குது !
நரி போலும் தந்திரமாய்
>>>நய வஞ்சகம் புரியுது !

மரித்துப்போன இதயம் குத்தி
>>>ரண களமாய் ஆக்குது !
பரிவு காட்ட ஆளின்றி
>>>விழி இரண்டும் கசியுது !

பிரிவினிலும் கருணை இன்றி
>>>லாபம் மட்டும் பார்க்குது !
புரிதல் இல்லா பந்தங்கள்
>>>இருந்து மில்லா நிலையிது ....!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (18-Aug-14, 5:50 pm)
பார்வை : 164

மேலே