அழகான வாழ்க்கை ஆனந்தமாய் போட்டிக்கவிதை
அழகான வாழ்க்கை ஆனந்தமாய்.......
நாமும் கழிப்போம் கொண்டாட்டமாய்
ஒரே ஒரு வாழ்கை நம் பக்கமாய்
வாழ்ந்து சாவோம் இனிதானதாய்
இருக்கும் காலம் நீயும் உழை
இருக்கும் நேரம் நீயும் கொடு
கேட்க்கும் உள்ளம் குளிரவை
தலை காக்கும் தர்மம் செய்
சுத்தம் பேணி சுகமாய் வாழ்
சுற்றவர் சேர்ந்து இன்பம் பகிர்
மற்றவர் மானம் நீயும் பேண்
உந்தன் புகழும் ஊர் சொல்ல கேள்
அச்சம் தவிர் ஆண்மை கொள்
அஞ்சும் நெஞ்சம் இன்றே கொல்லு
அன்னை மடியில் அன்பாய் சாய்
அவளின் பாதடியில் சொர்க்கம் பார்
உழைக்கும் காலம் தூக்கம் மற
தூங்கும் நேரம் உழைப்பை துற
ஓடியாடி நீயும் உழைத்தால்
ஓய்வை கொஞ்சம் நீயும் நினை
காலம் வந்தால் தாரம் தேடு
தாரம் வந்தும் தாயை பாரு
நேரம் வந்தால் சேயும் சேரும்
உன்னை பார்த்து சேயும் வளரும்
உற்றுப்பார்த்தால் உலகம் பொய்
உண்மை அறிவாய் நீயும் முயல்
உன்னை படைத்தான் ஒருவன் அங்கே
அவனை என்றும் மறவாய் நீயும் இங்கே