nuskymim - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : nuskymim |
இடம் | : kattankudy |
பிறந்த தேதி | : 31-Jul-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Dec-2011 |
பார்த்தவர்கள் | : 2282 |
புள்ளி | : 611 |
நான் இலங்கையை சேர்ந்தவன் .நான் பொறியல் பீட மாணவன் ,பெராதேனிய பல்கலைக் கழகத்தில் படிக்கிறேன்
திறந்த யன்னல் அருகில்
நான் பயணிக்கிறேன்
என் பழைய நினைவுகளை சுமந்தவனாக
என் பொழுதுகள்
இந்த பேரூந்து பயணத்தின்
எரிபொருளாக
எரிந்துகொண்டே இருக்கிறது
என் நண்பர்களின்
சிரிப்பொலிகளும் சிறு கதைகளும்
என் பயணத்தின் அலங்காரமாக
சாரதியின் ஆர்முடுகளில்
என் கற்பனைகளும்
சாட்டை பட்ட குதிரையாய்
தெறித்து ஓடுகின்றன
என் காலை பொழுதும்
மாலை பொழுதும்
காட்சியளிப்பதே இந்த
யன்னல் அருகில்தான்
உழைக்க ஓடும்
கூட்டத்தில்
நான் மட்டும் என்ன
விதிவிலக்கா ....
நானும் ஓடுகிறேன்
பணத்திற்காக
ஏனோ இந்த யன்னல் அருகில்
பழைய ஞாபகங்களுடன்
#வெளிச்சம் *
இருண்ட இரவின்
கருமை போக்க
கதிரவன் தருவான்- கதிர்
வெளிச்சம்
உழைப்பாளியின்
வியர்வை காயுமுன்
முதலாளியின்- வேதனம்
வெளிச்சம்
பசி கொண்டு
பிச்சை கேட்கும்
வயோதிபன் தட்டில்-ஒரு ரூபாய்
வெளிச்சம்
மலடி என்று
பெயர் கேட்ட மாதர்
வயிற்றில் -பிள்ளை பேறு
வெளிச்சம்
அநாதை விடுதியில்
ஏங்கும் குழந்தை மனதில்
தத்தெடுக்கும்- தாய்
வெளிச்சம்
தோல்வி கண்டு
துவண்டவனின்
தோளில் தட்டும்- கைகள்
வெளிச்சம்
வரதட்சணை எனும்
மலைமேல் சாவக்கிடக்கும்
பெண்ணுக்கு
மாலை தரும் -ஆண்
வெளிச்சம்
வயோதிபம் அடைந்த
பெற்றோர் முகம் காண
துடிக்கும் -பிள்ளை
வெளிச்சம்
அம்மாவின் தாலாட்டு
அப்ப
ஆராரோ ஆரீராரோ
தேனமுதே ஆராரோ
வெண்திங்கள் நீதானோ
பத்து திங்கள் பொத்தி வைச்சி
பத்திரமா பெத்து வந்தேன்
பகல் நிலவே உன்ன நானும்
பவளமா பாத்துக்கிட்டேன்
ஆராரோ ஆரீராரோ
தேனமுதே ஆராரோ
வெண்திங்கள் நீதானோ
ஆரீராரோ
தேனமுதே ஆராரோ
வெண்திங்கள் நீதானோ
பத்து திங்கள் பொத்தி வைச்சி
பத்திரமா பெத்து வந்தேன்
பகல் நிலவே உன்ன நானும்
பவளமா பாத்துக்கிட்டேன்
ஆராரோ ஆரீராரோ
தேனமுதே ஆராரோ
வெண்திங்கள் நீதானோ
நெல் அறுக்க போகையில
உன்ன முதுகோட அணைச்சிகிட்டேன்
தெருவோரம் இருக்கும் மரத்தில
தூலியிட்டு தாலாட்டினேன்
ஆராரோ ஆரீராரோ
தேனமுதே ஆராரோ
வெண்திங்கள் நீதானோ
பாலூட்டி பாசத
கனவே கலையாதே
கண்ணீர் சிந்தாதே
கவலை நீளாதே
கைகள் வீழ்காதே
உலகை நம்பாதே
உறவை தேடாதே
உழைப்பை குறையாதே
உன்னை இகழாதே
இமைகள் மூடாதே
இளமையை கரைக்காதே
இல்லாமை தொடராதே
இறைவனை மறவாதே
நம்பிக்கை குறைக்காதே
நல்லவனை இழக்காதே
நன்றி மறவாதே
நாளையை தேடாதே
மனைவியை துரத்தாதே
மனங்களை உடையாதே
மறப்பவனாய் இருக்காதே
மாறும் நீ தளராததே
குழந்தையை வஞ்சாதே
குறும்புகள் குறையாதே
கும்மாளம் இழக்காதே
குடும்பம் பிரியாததே
களவை தேடாதே
காசு தங்காதே
காரியம் மறவாதே
காலம் சிந்தாதே
போதை கொள்ளாதே
போனதை நினையாதே
போதாது என எண்ணாதே
போகும் பாதை
எப்போதும் பிரியாதே
கனவே கலையாதே
கண்ணீர் சிந்தாதே
கவலை நீளாதே
கைகள் வீழ்காதே
உலகை நம்பாதே
உறவை தேடாதே
உழைப்பை குறையாதே
உன்னை இகழாதே
இமைகள் மூடாதே
இளமையை கரைக்காதே
இல்லாமை தொடராதே
இறைவனை மறவாதே
நம்பிக்கை குறைக்காதே
நல்லவனை இழக்காதே
நன்றி மறவாதே
நாளையை தேடாதே
மனைவியை துரத்தாதே
மனங்களை உடையாதே
மறப்பவனாய் இருக்காதே
மாறும் நீ தளராததே
குழந்தையை வஞ்சாதே
குறும்புகள் குறையாதே
கும்மாளம் இழக்காதே
குடும்பம் பிரியாததே
களவை தேடாதே
காசு தங்காதே
காரியம் மறவாதே
காலம் சிந்தாதே
போதை கொள்ளாதே
போனதை நினையாதே
போதாது என எண்ணாதே
போகும் பாதை
எப்போதும் பிரியாதே
விடிந்து விட்டது..!
ஏன் இன்னும் விழித்திட மறுக்கிறாய்?
ஓ.. உன் வாழ்வில் தொலைத்து விட்ட
சந்தோசங்களை கனவிலாவது காண்பதற்கா..??
நதிநீர் பங்கீடு
நீதிமன்றத் தலையீடு
நடுவண் மன்றம் அமைத்திட
நால்வகைக் கருத்து முரண்பாடு
நடுவில் இருக்கும் அரசுக்கோ
நாளைய தேர்தலுக்கான ஒருப்பாடு
இதிகாச இராமனுக்கும்
மூராவழி பாபருக்கும்
இடம் வேண்டி இருதரப்பில்
இன்றுவரை கூப்பாடு
இந்திய இறையாண்மைக்கு
இது விளைத்தது கூறுபாடு
இருகரம் நீட்டிய இந்திய அன்னையின்
சிரத்தில் புற்றாய் ஆசாத் காஷ்மீர்
மாநிலத்திடை உறவு மல்லுக்கட்டு
முடக்குவாதமாய் இடபுரம் மாவோயிஸ்டு
இனிவரும் நாளில் இவை முற்றிப்போனால்
இந்தியன் என்ற உன் அடையாளம் நிலைக்குமா.....?
கவிதாயினி அமுதா பொற்கொடி
அடுத்த மனிதனுக்கு
ஆறுதல் சொல்கையில்
எளிதாய் இருந்ததடி
பிரிவதும்,சேர்வதும்
இயற்கையென்று !
தனக்கு வரும்போதுதான்
தெரிகிறது தனிமையின்
தகிப்பு என்னவென்று !
நீயொன்றும் நெடுநாள்
நட்பில்லை !
உதிரத்தில் ஒட்டிய
உறவுமில்லை !
சில காலமாய்தான்
நம் சினேகம் !
ஆனால் வெறும் பார்வையிலேயே
பரவசம் தரும்
விந்தையை
உன்னிலிருந்துதான்
பெற்றேன்.....!
வெள்ளைக் காகிதங்களெல்லாம்
விளைநிலங்களாயின !
உன் அசைவுகளையெல்லாம்
கவிதைகளாக்கியதில் !
நீ கொஞ்சம் விலகினாலும்
உடைந்த கண்ணாடியாய்
என் மனம் ! அதிலும் ஆயிரமாயிரமாய் உன்
அழகு முகம் !
நீயோ நிரந்தரமாய்
பிரியலாமென்கிறாய்
உன் பிரிவில் நான்
உயிர் பிரிய
இரவு...
உணர்விற்கான வேளையிது
உறவுக்கான நேரமிது
உடல்கள் உடலோடும்
உடல்கள் ஓய்வோடும்
உயிர்கள் வலியோடும்
விழிகள் நீரோடும்
மனங்கள் கனவோடும்
கைக்குலுக்குமொரு
சுதந்திர பொழுதிது!
இரவை நீங்கள் அலுப்பு நீக்கயென்கிறீர்கள்
நானோ அர்த்தப்படுத்த
என்கிறேன்...
இருளில் கசியும்
இறப்பு தேதியே
என் இன்றின் நிமிடங்களை
அர்த்தம் செய்கிறது!
இரவை நீங்கள்
துயரச் சாயலென்கிறீர்கள்.
நானோ சமத்துவ
சாரமென்கிறேன்...
பறப்பன,தவழ்வன,
அசைவன, நட்சத்திரம்,
பூமி,நிலவெனும் எந்த
பேதமும்
இரவின் மடியிலில்லை!
இரவை நீங்கள்
அர்த்த ஜாமமென்கிறீர்கள்.
நானோ அந்தரங்க
சாளரமென்கிறேன்...
இரைந்துரைத்தால்
இழுக்காகும்
முள்ளில் பட்ட
சேலைகள் நாம்
துண்டு துண்டாய்
கிழிகின்றோம்
வில்லால் எய்த
அம்புகள் நாம்
குறி தப்பாது
துளைக்கின்றோம்
அமாவாசையில் ஒளிரும்
விளக்குகள் நாம்
வெளிச்சம் பரப்பி
சுவாசிக்கின்றோம்
கண்ணில் மிதக்கும்
கருவிழி நாம்
இமைகள் மூட
துயில்கின்றோம்
நீரில் இருக்கும்
தவளைகள் நாம்
மண்ணை தேடி
அழைக்கின்றோம்
உண்மையாய் சொன்னால்
நாங்கள் யார்
முகவரி அற்று
தவிக்கின்றோம்
மண்ணில் தவழும் என் மடி மீன் -போட்டி முடிவுகள்
போட்டி முடிவுகள்....
ஆண்கள் ---
முதல் பரிசு-மெய்யன் நடராஜ்
2ம் பரிசு-------பொள்ளாச்சி அபி
3ம் பரிசு-------கே.எஸ்.கலைஞானகுமார்
பெண்கள் ----
முதல் பரிசு -----சியாமளா ராஜசேகரன்
2ம் பரிசு ---------கார்த்திகா AK
3ம் பரிசு-------சொ. சாந்தி
மரபு
கண்ணதாசன்
முனைப்பூட்டும் பரிசு
நுஸ்கி முஇமு
சுகுமார்
தங்க ஆரோக்கிய ராஜ்
குமரிப்பையன்
அழகான வாழ்க்கை ஆனந்தமாய்.......
நாமும் கழிப்போம் கொண்டாட்டமாய்
ஒரே ஒரு வாழ்கை நம் பக்கமாய்
வாழ்ந்து சாவோம் இனிதானதாய்
இருக்கும் காலம் நீயும் உழை
இருக்கும் நேரம் நீயும் கொடு
கேட்க்கும் உள்ளம் குளிரவை
தலை காக்கும் தர்மம் செய்
சுத்தம் பேணி சுகமாய் வாழ்
சுற்றவர் சேர்ந்து இன்பம் பகிர்
மற்றவர் மானம் நீயும் பேண்
உந்தன் புகழும் ஊர் சொல்ல கேள்
அச்சம் தவிர் ஆண்மை கொள்
அஞ்சும் நெஞ்சம் இன்றே கொல்லு
அன்னை மடியில் அன்பாய் சாய்
அவளின் பாதடியில் சொர்க்கம் பார்
உழைக்கும் காலம் தூக்கம் மற
தூங்கும் நேரம் உழைப்பை துற
ஓடியாடி நீயும் உழைத்தால்
ஓய்வை கொஞ்சம் நீயும் நினை