கருப்பு வாழ்க்கை

முள்ளில் பட்ட
சேலைகள் நாம்
துண்டு துண்டாய்
கிழிகின்றோம்

வில்லால் எய்த
அம்புகள் நாம்
குறி தப்பாது
துளைக்கின்றோம்

அமாவாசையில் ஒளிரும்
விளக்குகள் நாம்
வெளிச்சம் பரப்பி
சுவாசிக்கின்றோம்

கண்ணில் மிதக்கும்
கருவிழி நாம்
இமைகள் மூட
துயில்கின்றோம்

நீரில் இருக்கும்
தவளைகள் நாம்
மண்ணை தேடி
அழைக்கின்றோம்

உண்மையாய் சொன்னால்
நாங்கள் யார்
முகவரி அற்று
தவிக்கின்றோம்

எழுதியவர் : மு.இ.மு.நுஸ்கி (1-Nov-16, 2:18 pm)
Tanglish : karuppu vaazhkkai
பார்வை : 367

மேலே