பட்டம் கிழித்த பட்டதாரி

பட்டம் கிழித்த பட்டதாரி...
===========================

பொறியியல் பட்டம்
நான் கண்ட கனவு
நான் கையில் பெற்ற தருணம்
தாயின் கண்ணீர் துடைப்பான்
தந்தையின் கடன் அடைப்பான்
இதுவெல்லாம் கனவின் கனவாய் மாற
வாங்கிய பட்டம் தண்ணீரில் மிதக்க
என் வாழ்வோ கண்ணீரில் துடிக்க
நகரத்தின் வாயில் நானும்
பட்டம் கிழித்த பட்டதாரி...

பிச்சைக்காரனாய் பட்டத்தை கையில் ஏந்தி
நானும் தெருதெருவாய் வேலையை தேடி
உடலும் உலர்ந்து போக..
அலைபேசியில் அன்னையின் குரலில்
சுகம் எனும் வார்த்தையில் சுகமில்லாமல்
இங்கு நான் சுகம் எனும்
ஒரு வார்த்தையில் உயிர் வாழ்கிறது
என் குடும்பம்
ஒரு ரூபாயில் சுழல்கிறது
என் உலகம்

மூளை தோறும் கவலை
ஒரு மூலையில் தேடிய வேலை
பட்டறிவும் இல்லை
படித்த அறிவும் இல்லை
நானும் படித்த முட்டாளை
அவனோடு பணியில்....

மனதிலும் ஊழல்
மண்ணிலும் ஊழல்
திறமையாய் ஏமாந்து போகிறேன்
அறிவில்லாதவனாய்
நடித்து தினமும் சாகிறேன்...

என் வாழ்க்கையும் பட்டமும்
விற்பனை சந்தையில்
அனாதையாய்...!

விடியுமா என் வாழ்விலும்
ஓர் விடிவெள்ளி...!

---ஜ.கு.பாலாஜி.----

எழுதியவர் : ஜ.கு.பாலாஜி (1-Nov-16, 3:11 pm)
சேர்த்தது : J K பாலாஜி
பார்வை : 98

மேலே