நம்பிக்கை

கனவே கலையாதே
கண்ணீர் சிந்தாதே
கவலை நீளாதே
கைகள் வீழ்காதே

உலகை நம்பாதே
உறவை தேடாதே
உழைப்பை குறையாதே
உன்னை இகழாதே

இமைகள் மூடாதே
இளமையை கரைக்காதே
இல்லாமை தொடராதே
இறைவனை மறவாதே

நம்பிக்கை குறைக்காதே
நல்லவனை இழக்காதே
நன்றி மறவாதே
நாளையை தேடாதே

மனைவியை துரத்தாதே
மனங்களை உடையாதே
மறப்பவனாய் இருக்காதே
மாறும் நீ தளராததே

குழந்தையை வஞ்சாதே
குறும்புகள் குறையாதே
கும்மாளம் இழக்காதே
குடும்பம் பிரியாததே

களவை தேடாதே
காசு தங்காதே
காரியம் மறவாதே
காலம் சிந்தாதே

போதை கொள்ளாதே
போனதை நினையாதே
போதாது என எண்ணாதே
போகும் பாதை
எப்போதும் பிரியாதே

அன்புக்கு அலையாதே
அயலவர் தூற்றாதே
அன்னம் வீணாக்காதே
அறம் செய்ய மறவாதே

தன்னை புகழாதே
தலைக்கனம் கொள்ளாதே
தந்தையை அவமதியாதே
தாயின் மடிசாய மறக்காதே

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (10-Nov-16, 1:51 pm)
Tanglish : nambikkai
பார்வை : 412

மேலே