செல்லாகாசு
08-11-2016 நள்ளிரவு11:59:59 வரை
பொருளாதார உலகின்
ஆட்சி பீடத்தின் இருக்கையில்
ஒய்யாரமாய்
ஏழைகளின் வீடுகளிள்
எஜமானியாய்
பணக்கார வீடுகளின்
பாலமாய்
படிக்க,
நகை வாங்க,
இடம் வாங்க,
பரிசளிக்க,
திருமணம் செய்ய,
கார் வாங்க,
கடன் வாங்க,
மருத்துவம் செய்ய,
விதை வாங்க,
விற்பனை செய்ய,
பயணம் செய்ய,
லஞ்சம் வாங்க,
கருப்பு பணமாய் பதுக்கி வைக்க,
கள்ள நோட்டு அடிக்க மாதிரி எடுக்க,
குடிகார கணவனுக்கு தெரியாமல்
ஒளித்து வைக்க,
டாஸ்மாக் போதையில் மூழ்கி கிடக்க,
எதிர்கால வாழ்வு என்று எடுத்து வைக்க,
இறந்த பின்பும்
ஈம சடங்கு செய்ய,
இப்படி பிறப்பு முதல்
இறப்பு வரை
வாழ்வோடு கலந்து வந்த
இந்த பணம் தான்
இதோ அடுத்த நொடியில் இருந்து
செல்லா காசாக
செத்து விழ போகிறது
பணத்திற்கு பணம் மாறும்
ஆனால்
இறக்குமுன் கடைசியாய்
அப்பா கொடுத்த
அந்த பாசமும் கூடவே வருமா
தன் பேரகுழந்தைக்கென சேர்த்து வைத்து
மறைந்துபோன தாத்தா பாட்டிகளின்
அக்கரை வருமா
வேலை தேடி புறப்படும் முன்
கண்ணிரோடு முந்தானையில்
இருந்து அம்மா
தந்த அந்த வாசம் வருமா?
செல்லா காசாய் ஆன அடுத்த கனமே
சுண்டல் மடிக்கவும்
கழிவரையில் கைதுடிக்கவும்
இன்னமும் எவ்வளவு இழிவு
படுத்தி அறட்டை அடிக்கும்
இளைய சமூதாயமே
எத்தனையோ பேரின்
வியர்வையும்
கனவுகளையும்
ஏக்கங்களையும்
சுமந்து கொண்டுதான்
விடைபெறுகிறது
நன்றியோடு விடை கொடுப்போம்
நன்றியுடன்
ந.சத்யா