கண்னே கண்மணியே

கண்ணுக்கு கண்ணாக காப்பேன்
என் கண்ணே...

முத்தமிட்டு முத்தமிட்டு தொட்டு பாா்க்கிறேன்...கையால் தொட்டால் நோகுமோ என்று...

வலியோடு உன்னை ஈன்ற போதிலும்....புன்சிாிப்பை பாா்க்கையில் பூ பூக்கின்றேன்...

சொல்லி சொல்லி வளா்க்க போகிறேன்....
செல்லமகனிடம்...
பெண்மைதனை மதிக்க சொல்லி...

ஊட்டி ஊட்டி வளர்க்க போகிறன்...
ஊழல் செய்யாதே என்று...

எடுத்து எடுத்து சொல்லுவேன் ஏமாற்றாதே என்று...
ஏத்துகொள் என்பேன் ஏமாற்றத்தை...

வாஞ்சையுடன் வளர்ப்பேன் பிறரை வஞ்சிக்காதே என்று சொல்லி...

சினம் கொள்ளாதே சின்ன தங்கமே...
சீரழித்து விடும் உன்னையே...

சகித்து கொள்ள பழகு சரித்திரம் பேசும் உன்னை...

பொறுமை பொன்னாடை போற்றும்...
புகழுக்கு மயங்காதே படுகுழியில் தள்ளிடும் என் தங்கமே...

ஆணவம் கொள்ளாதே என் ஆண்மகனே ஆண்டவனும் மாண்டு போவான் ஆணவத்தால்...

மது,மாது,சூது,புகை, புதைத்து விடும் உன்னை...வாழ்க்கை எது என்று வாழும் வரை தெரியாத மாயை மயக்கிவிடும் உன்னை...மாய்த்து விடும் என்னையும் என்னை போன்று உன் மேல் அன்பு கொண்ட அனைவரையும்...

கட்டிய மனைவியை மட்டும் கண்ணுக்குள் மற்றாள் எல்லாம் சாகோதரி கணக்கில் என்பேன்

குழந்தைக்கு சொல்லி வளா் நான் சொன்ன சொல்லை...

மகிழ்ந்தும் மகிழ்வித்தும் மன்னாராய் வாழ் என் வாா்த்தையை நினைவில் கொண்டு..வாழ்த்திடும் என் மனம்...

எழுதியவர் : சுஜித்ரா பிரகாஷ் (10-Nov-16, 8:30 pm)
பார்வை : 156

மேலே