நாட்டார் பாடல்

ஆராரோ ஆரீராரோ
தேனமுதே ஆராரோ
வெண்திங்கள் நீதானோ

பத்து திங்கள் பொத்தி வைச்சி
பத்திரமா பெத்து வந்தேன்
பகல் நிலவே உன்ன நானும்
பவளமா பாத்துக்கிட்டேன்

ஆராரோ ஆரீராரோ
தேனமுதே ஆராரோ
வெண்திங்கள் நீதானோ

ஆரீராரோ
தேனமுதே ஆராரோ
வெண்திங்கள் நீதானோ

பத்து திங்கள் பொத்தி வைச்சி
பத்திரமா பெத்து வந்தேன்
பகல் நிலவே உன்ன நானும்
பவளமா பாத்துக்கிட்டேன்

ஆராரோ ஆரீராரோ
தேனமுதே ஆராரோ
வெண்திங்கள் நீதானோ

நெல் அறுக்க போகையில
உன்ன முதுகோட அணைச்சிகிட்டேன்
தெருவோரம் இருக்கும் மரத்தில
தூலியிட்டு தாலாட்டினேன்

ஆராரோ ஆரீராரோ
தேனமுதே ஆராரோ
வெண்திங்கள் நீதானோ

பாலூட்டி பாசத்த நான்
பத்திரமா சேத்துக்கிட்டேன்
பாலகனே நீ தூங்கையில
தோளோடு சாய்ச்சிகிட்டேன்

ஆராரோ ஆரீராரோ
தேனமுதே ஆராரோ
வெண்திங்கள் நீதானோ

நீ
பள்ளிக்கூடம் போகையில
பாதைய நோட்டமிட்டேன்
நீ பத்திரமா திரும்பும் வர
பாதி உசுர தொலைச்சுப்புட்டேன்

ஆராரோ ஆரீராரோ
தேனமுதே ஆராரோ
வெண்திங்கள் நீதானோ

நீ
வேட்டி கட்டி சால்வ போட
உன் அழக வியந்துபுட்டேன்
நீ
மணக்கோலம் போடயில
பைத்தியம் நான் அழுதுப்புட்டேன்

ஆராரோ ஆரீராரோ
தேனமுதே ஆராரோ
வெண்திங்கள் நீதானோ

உன்னை நம்பி வாழ்ந்து
என் காலத்த தேச்சிபுட்டேன்
மண்ணுக்குள்ள போகும் வர
உன்னையே மகனா பாத்துக்கிட்டேன்

ஆராரோ ஆரீராரோ
தேனமுதே ஆராரோ
வெண்திங்கள் நீதானோ

மகனே
நான் மண்ணுக்குள்ள போன பின்ன
மறவாத என்ன
நேரம் கிடச்சா வந்து போ
மண்ணுக்குள்ள என் உசுரு
ஏங்கும் தங்கம்

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (12-Nov-16, 8:37 am)
பார்வை : 420

மேலே