தோழியே
தோழியான தோழியே
வாடகை இன்றி குடி
புகுந்தாயே என்
இதயம் எனும் வீட்டில்...
நட்புக்கு அகராதி
நீயாவாய்... என்
உடல் எடையை சுமக்கும்
என் கால்கள் உன்னை
என் மனதினில் சுமக்க
வலிக்குமோ...
என் வாழ்க்கையை பங்கு
போட வேண்டாம்... என் கண்கள்
கலங்கும் முன்னே துடைக்க
உன் இரு கரங்கள்
வேண்டும்...
தோல் தட்டி எழுப்பி
புதிய பாதை வகுக்க
வழி சொல்வாயே...