வாழ்க்கையை அனுபவிக்க - கனவு காணாதே, கற்பனை செய்தால் கூட போதும்

தனிமை
ஒரு தவமே!
அமைதியும்
ஒரு வரம்!

வாழ்க்கை
சமூக ஆற்றில்
உனக்கான படகு.!

புயலும் பூகம்பமும்
வெயிலும் மழையும்
நீ ஏற்றுக்கொண்டேயாக வேண்டிய
நிர்பந்தத்தில்
இடைக்காலத்தில் இன்பத்தை
ஊற்றாக உன்னில் ஓட விடு.!

கனவு காண், கலாம் சொன்னார்;
முடியவில்லையா, கற்பனை செய்.!

கதை நாயகன் நீயே,
கற்பனையில் கட்டிப்பிடித்து டூயட் ஆடு,
துள்ளும் மனது!

கதை நாயகிக்கா பஞ்சம்,
கற்பனையில் எல்லாமே சுதந்திரம், இலவசம்.
தனுஷ் சிவகார்த்திகேயன் போன்றோருக்கு
ஒன்றும் நீ சளைத்தவனில்லை,
கீர்த்தி சுரேஷ் உன் கனவிலும் காட்சி தரலாம்.
அனுபவி ராஜா அனுபவி!

கமல் சொல்லியிருக்கிறார்,
எதிரியை அடித்துக்காயப்படுத்துமுன்
கற்பனை செய்து பார்க்க.
எல்லையில் இந்திய ராணுவமும் கற்பனை செய்தால்தானே
பாகிஸ்தான் பயப்படும்படி எதுவும் செய்ய முடியும்.!

தினம் தினம் நொடிகளெல்லாம் பெரிய கணங்களாய்
உன்னை கடந்து போகும் போது
களித்திரு, கற்பனையில்
காலம் மாறிக்கொண்டேயிருக்கும்
கடிதானால் கூட தாக்குப்பிடிக்க முடியும்.

இல்லையேல்
இந்த வாழ்வின் விசித்திர சோதனைகளில்
விரக்திதான் மிஞ்சும்,
விரசமும் வாட்டும்,
வீரமும் சோரம் போகும்..!

கற்பனைதான் உனக்கான கட்டிங் பிளேயர்,
எல்லா நேரமும் எடிட் செய்து பார்,
எவ்வளவு நேரமும் உன்னால் வரிசையில்
காத்திருக்க முடியும்,
ஏனெனில்
நிஜத்தில் நீ
கதாநாயகன் அல்ல,
கோடிகளில் ஒருவன்.!

எழுதியவர் : செல்வமணி (12-Nov-16, 8:54 am)
பார்வை : 265

மேலே