வெளிச்சம்

#வெளிச்சம் *
இருண்ட இரவின்
கருமை போக்க
கதிரவன் தருவான்- கதிர்
வெளிச்சம்

உழைப்பாளியின்
வியர்வை காயுமுன்
முதலாளியின்- வேதனம்
வெளிச்சம்

பசி கொண்டு
பிச்சை கேட்கும்
வயோதிபன் தட்டில்-ஒரு ரூபாய்
வெளிச்சம்

மலடி என்று
பெயர் கேட்ட மாதர்
வயிற்றில் -பிள்ளை பேறு
வெளிச்சம்

அநாதை விடுதியில்
ஏங்கும் குழந்தை மனதில்
தத்தெடுக்கும்- தாய்
வெளிச்சம்

தோல்வி கண்டு
துவண்டவனின்
தோளில் தட்டும்- கைகள்
வெளிச்சம்

வரதட்சணை எனும்
மலைமேல் சாவக்கிடக்கும்
பெண்ணுக்கு
மாலை தரும் -ஆண்
வெளிச்சம்

வயோதிபம் அடைந்த
பெற்றோர் முகம் காண
துடிக்கும் -பிள்ளை
வெளிச்சம்

அம்மாவின் தாலாட்டு
அப்பாவின் நெஞ்சுக்கூடு
அழும் குழந்தைக்கு
வெளிச்சம்

ஒரு வேளை உணவுக்காய்
அலையும் ஏழையின்
வீட்டில் அடுப்பெரிவது
வெளிச்சம்

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (23-Nov-16, 2:13 pm)
சேர்த்தது : nuskymim
Tanglish : velicham
பார்வை : 103

மேலே