கடைசி வரை....

வாழ்வில் அதிகம் பாதியில் பிரிகின்ற உறவுகள் ...!

பத்து மாதம் சுமந்தே
பெற்ற தாயவள் பாசம்
மண்ணில் பிறக்கும் வரை....!

வியர்வை சிந்தி உழைப்பால்
உயரும் தந்தை பாசம்
மண்ணில் வளரும் வரை....!

ஒரு கொடியின் கிளையில்
பூக்கும் பல பூக்களாய்
பிறக்கும் சகோதரர் பாசம்
தனியாக தனக்கென்று குடும்பம் அமையும் வரை....!

தேடி வருகின்ற உறவுகள் பாசம்
பணம் எம்மிடம் இருக்கும் வரை..!

ஆசையாய் பெற்ற பிள்ளை பாசம்
காதல் மோகத்தில் மூழ்கி
காதலியை கரம் பிடித்தே அவன்
செல்லும் வரை...!

மண்ணுலகில் வாழ்கின்ற வாழ்வின்
கடைசி வரை....
திருமணப் பந்தத்தில் இணைந்த
தாலி கட்டிய மணாளனே
வருகிறான் வாழ்வின் கடைசி வரை!!!

எழுதியவர் : சி.பிருந்தா (23-Nov-16, 2:12 pm)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
Tanglish : kadasi varai
பார்வை : 58

மேலே