ஒரு வழிப்பாதை

வாழ்கின்ற காலத்தில்
நற்பிரஜையாய் நான் வாழ
தெரிவு செய்த ஒரு வழிப்பாதையே
நேர் வழிப்பாதை....!

துன்பங்களோ ஆயிரம்
என்னை சூழ்ந்து கொள்ள....
போகின்ற வழிதவறி போகாது
நடந்தேன் நான் ஒரு வழிப்பாதையில்!

மாசற்ற உலகில் மாசுள்ள உயிர்கள் நிறைந்தே காணப்பட
அதிகரித்தன சமூகவிரோதங்கள்
நானோ என் வழிப்பாதையில்
சென்றேன் நேர்மையுள்ளவனாய்...!

மனம் போகும் போக்கே பல வழிப்பாதை...!
வெற்றி அடையலாம் சிந்தித்து போகையில்...!
வெற்றியின் இரகசியமே ஒரு வழிப்பாதை....!

எழுதியவர் : பிருந்தா (23-Nov-16, 1:34 pm)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
Tanglish : oru valippaadhai
பார்வை : 105

மேலே