ஆகாய வெண்ணிலவே

வளர்பிறையும் அழகு
தேய்பிறையும் அழகு
உன்னாலே..ஆகாய வெண்ணிலவே..

அனுதினமும்
அனைவரையும்
அழகாய் கவி எழுத‌
அச்சாணி அமைக்கிறாய்...

காதலனோடு கைகோர்த்து
கடலலையை ரசிக்கவைக்கும்
ரசனையின் அழகு நீ..

வெண்ணிலவே... உலகுக்கே
விளக்கேற்றி வைத்து விட்டு
விடிய விடிய காத்திருக்கும்
விட்டில் பூச்சியும் நீயே...
வழித்துணையும் நீயே..

ஆகாய வெண்ணிலவே
அன்னையின் தாலாட்டில்
என்றும் உனக்கே முதலிடம்...

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (23-Nov-16, 3:09 pm)
Tanglish : aakaaya vennilave
பார்வை : 63

மேலே